Header

Sri Lanka Army

Defender of the Nation

15th July 2020 15:02:40 Hours

ஓய்வு பெற்ற மூத்த அதிகாரியின் அன்பளிப்புடன் குடும்ப நபருக்கு புதிய வீடு கையளிப்பு

ஓய்வு பெற்ற இராணுவ உயரதிகாரியான மேஜர் ஜெனரல் ஜே.சி. ரம்புக்பொத அவர்களது உதவியுடன் வாழ்வாதாரத்தில் புதிய வீடுகளை நிர்மானிப்பதன் ஒரு பகுதியாக தந்திரிமலையில் வசித்து வரும் ஏழைக் குடும்பத்திற்கு உதவியளிக்கும் முகமாக வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் ஒரு புதிய வீடு கட்டிட நிர்மான பணிகள் ஆரம்பித்து இம் மாதம் 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கட்டிட நிர்மான பணிகள் முழுமையாக நிறைவடைந்த நிலையில் பயனாளிக்கு கையளிக்கப்பட்டன.

213 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் கே.என் ரசிக குமார அவர்களது தனிப்பட்ட தொடர்புகள் மூலம் யாழ்ப்பாணத்திலுள்ள தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் 21, 213 ஆவது படைத் தலைமையகத்தின் கீழுள்ள படையினரால் இந்த கட்டிட நிர்மான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த திரு சுசந்த அநுர குமாரவிற்கு தங்குமிட வசதிகளியின்மையினால் இதனை அவதானித்து சாலை, சாப்பாட்டறை, படுகையறைகள், குளியலறை மற்றும் சமையலறைகளை உள்ளடக்கிய முழு வசதிகளுடன உள்ளடக்கப்பட்ட வீடு மற்றும் வீட்டு பொருட்கள் , மின்சார உபகரணங்கள் உள்ளடக்கிய பொருட்கள் மற்றும் தளபாடங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்த வீடு கையளிப்பு நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்த வன்னி பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் தம்மிக ஜயசிங்க அவர்கள் பயனாளிக்கு இந்த புதிய இல்லத்தின் சாவியை வழங்கி வைத்தார்.

மேலும் இந்த நிகழ்விற்கு இராணுவத்தில் ஓய்வு பெற்ற உயரதிகாரியான மேஜர் ஜெனரல் ஜே.சி ரம்புக்பொத்த மற்றும் அவரது பாரியார், பாதுகாப்பு தலைமை பிரதானி அலுவலகத்தின் பொது நிர்வாக பிரதானி மேஜர் ஜெனரல் குமார ஜயம்பதிரன, 21 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் விகும் லியனகே, 213, 21, 213 ஆவது படைத் தலைமையகத்தின் சிவில் தொடர்பாடல் அதிகாரிகள் , 5 ஆவது இலேசாயுத காலாட் படையணி, 5 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியின் கட்டளை அதிகாரிகள், பயனாளிகளின் குடும்பத்தினர் இணைந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். jordan release date | Vans Shoes That Change Color in the Sun: UV Era Ink Stacked & More – Fitforhealth News