Header

Sri Lanka Army

Defender of the Nation

13th July 2020 16:20:21 Hours

மத்திய பாதுகாப்பு படைத் தளபதி உத்தியோகபூர்வ விஜயம்

மத்திய பாதுகாப்பு படைத் தளபதியான மேஜர் ஜெனரல் கீர்த்தி கொஷ்தா அவர்கள் இவரது நிர்வாகித்தின் கீழ் இயங்கும் 111 ஆவது படைத் தலைமையகம், 2 ஆவது சிங்கப் படையணி, 10 ஆவது கஜபா படையணி மற்றும் இலங்கை ரயிபல் படையணி தலைமையகங்களுக்கு உத்தியோகபூர்வமான விஜயத்தை இம் மாதம் 09- 10 ஆம் திகதிகளில் மேற்கொண்டார்.

111 ஆவது படைத் தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்ட படைத் தளபதியை இந்த தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் கே.ஏ.எம்.என்.எச் பண்டாரநாயக்க அவர்கள் வரவேற்றார். பின்னர் 2 ஆவது சிங்கப் படையணி, 10 ஆவது கஜபா படையணி, ரயிபல் படையணியின் கட்டளை அதிகாரிகளான மேஜர் ஏ.எம்.டப்ள்யூ.பி அபேரத்ன, மேஜர் ஏ.ஜே.எஸ் அபேநாயக மற்றும் கேர்ணல் ஆர்.எம்.எச் ஜயதிஸ்ஸ பண்டார போன்றோர் படையணி தலைமையகத்திற்கு சென்ற போது வரவேற்றுள்ளனர். இந்த படையணி தலைமையகங்களுக்கு வருகை தந்த படைத் தளபதி அவர்கள் தலைமையக வளாகத்தினுள் மரநடுகைகள் மேற்கொண்டு படையினர் மத்தியில் உரையையும் நிகழ்த்தினார். அத்துடன் பிரமுகர்களின் வருகையை முன்னிட்டு கையொப்பமிடும் புத்தகத்திலும் படைத் தளபதி கையொப்பமிட்டார்.

பின்னர் படைத் தளபதி அவர்கள் ரயிபல் படையணியினரது படையினர் தங்கியிருக்கும் வதிவிடங்கள் மற்றும் இந்த படையினரால் கடமைகள் மேற்கொள்ளும் விக்டோரியா ஹயிட்ரோ மின் நிலையங்களுக்கும் விஜயத்தை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Sports News | Klær Nike