11th July 2020 16:43:08 Hours
யாழ் பாதுகாப்புப் படை சமூக நல திட்டங்களுக்கு மேலதிகமாக ஆன்மீக நல் வாழ்வையும் மத நல்லிணக்கத்தையும் மேம்படுத்தும் நோக்கில் யாழ்ப்பாண குடா நாட்டு மத விழாக்களை நடத்துவதற்கான முழுமையான ஆதரவை வழங்கி வருகின்றது.
மாவிட்டப்புரம் கந்தசாமி கோவில் தலைமை குருக்கள் அவர்களின் அழைப்பின் பேரில் யாழ் பாதுகாப்புப் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வனிகசூரிய வெள்ளிக்கிழமை 10 ம் திகதி கோவில் கிரியா நிகழ்வுகளில் பங்கேற்றார்.
சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் படையினர் பக்தர்களுடன் சேர்ந்து இந்த நிகழ்வில் கலந்துக் கொண்டுஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டனர். buy footwear | balerínky