13th July 2020 16:04:47 Hours
கிளிநொச்சி மாவட்டத்தில் பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு முன்னர் 65 படைப்பிரிவு படையினர் ஞாயிற்றுக்கிழமை 12 ம் திகதி கொவிட் 19 தொற்று நோய் பரவுவதை தடுக்கும் வகையில் பாடசாலைகளில் தொற்று நீக்கும் திட்டத்தை மேற்கொண்டனர்.
இத் திட்டம் கிளிநொச்சி ஸ்கந்தபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, பாலிநகர் குமாரசாமி அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, கல்விளான்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மற்றும் பாலிநகர் மகா வித்யாலயம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக காணப்பட்டது. இப்பாடசாலைகளில் 4000 க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் படிப்பைத் தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
10 வது இலங்கை இலேசாயுத காலாட்படை மற்றும் 20 வது விஜயபாகு காலாட்படை படையினர் தனித்தனியாக அந்த பாடசாலைகளின் அனைத்து வகுப்பறைகள் மற்றும் பாடசாலை வளாகங்களை தொற்று நீக்கம் செய்தனர். இந்த திட்டம் 65 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார தலைமையில் 652 பிரிகேட் மற்றும் 653 பிரிகேட் தளபதிகளின் மேற்பார்வையில் இடம்பெற்றது. Best jordan Sneakers | Vans Shoes That Change Color in the Sun: UV Era Ink Stacked & More – Fitforhealth News