13th July 2020 16:12:31 Hours
யாழ்ப்பாணம் நகரம் மற்றும் அண்டிய பகுதிகளில் இருந்து பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் மாசுகளை அகற்றுவதற்கான பிற நிறுவனங்களின் ஒத்துழைப்பில் யாழ்ப்பாண பெரும் நகரம் தூய்மையாக்கல் திட்டம் இலங்கை இராணுவத்தின் யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 51 வது படைப்பிரிவின் ஏற்பாட்டில் பொலிஸ், விசேட அதிரடிப்படை மற்றும் இடர் முகாமைத்துவ நிலையம் என்பனவற்றின் ஒத்துழைப்பில் குடாநாட்டு முன்னனி பிரஜையான தியாகி அறக்கட்டளை நிதியத்தின் நிறுவுனரும் தலைவருமான திரு. வமதேவா தியாகேந்திரனின் பங்குபற்றலில் ஞாயிற்றுக்கிழமை 12ம் திகதி நடைப்பெற்றது.
யாழ் பாதுகாப்புப் படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வனிகசூரிய அவர்களின் எண்ணக் கருவிற்கமைவாக 51 படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் லலித் ரத்நாயக்கவின் வழிக்காட்டலில் 51 படைப்பிரிவு படையினர் முழு மாசுக்களில் இருந்து நகரத்தையும் விடுவிப்பதற்காக இந்த திட்டத்தில் தீவிரமாக பங்களித்தனர்.
யாழ் பாதுகாப்புப் படை தளபதி , யாழ் மாவட்டச் செயலாளர் திரு. கணபதிபிள்ளை மகேஷன், வடக்கு மாகாணத்தின் கல்விச் செயலாளர் திரு. எல் இலங்கோவன், 51 படைபிரிவு தளபதி, யாழ் மாநகர சபை ஆணையாளர், சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள், இடர் முகாமைத்துவ நிலைய பணிப்பாளர் மற்றும் படையினர் பங்குபற்றிருந்தனர். Best Nike Sneakers | Upcoming 2021 Nike Dunk Release Dates - Iebem-morelos