13th July 2020 16:17:21 Hours
30 ஆண்டுகளுக்கு முன்பு கொடிய யுத்தத்தில் கொக்காவில் செய்தி ஒலிபரப்பு கோபுரம் மற்றும் இராணுவ முகாமை பாதுகாப்பதற்காக உன்னத உயிர் தியாகத்தை செய்த கெப்டன் சாலிய அலதெனிய பி.டபிள்யூ.வி மற்றும் அவரது வீர படையினர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு 11 ஆம் திகதி சனிக்கிழமை கொக்காவில் படை வீரர் நினைவு தூபியில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றது.
இந் நிகழ்வானது 652 ஆவது படை தலைமையகத்தின் படைத் தளபதி பிரிகேடியர் அனில் பெரேரா அவர்களின் வழிகாட்டுதலுக்கமைவாக 6 ஆவது இலங்கை சிங்க படையணியின் படையினரால் ஏற்பாடுகள் செய்யப்பட்டதுடன். நினைவு தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்விற்கு 652 படை தலைமையகத்தின் படைத் தளபதி அவர்களின் அழைப்பின் பேரில் 65 ஆவது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். அதற்கமைய 6 ஆவது இலங்கை சிங்க படையணியின் 31 இராணுவ வீரர்களால் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. எயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் மறக்க முடியாத நினைவாக 40 நாட்களுக்கு மேலாக தண்ணீர் மற்றும் உணவுகள் இல்லாமல் கொக்கவில் முகாமையை பாதுகாத்த 54 சிங்கப் படை வீரர்கள் இராணுவ வீரர்களின் தன்னலமற்ற அர்ப்பணி இலங்கையின் இராணுவ வரலாற்றின் ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது என்பது குறிப்பிடதக்க விடயமாகும். url clone | Men's Sneakers