11th July 2020 19:10:51 Hours
651 ஆவது படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 19 ஆவது இலேசாயுத காலாட் படையணியின் பங்களிப்புடன் முழங்காவில் பகுதியில் டெங்கு ஒழிப்பு பணிகள் இம் மாதம் (09) ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டன.
65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டி.எம்.எச்.டி பண்டார அவர்களது வழிக்காட்டலின் கீழ் 651 ஆவது படைத் தலைமையகத்தின் 25 படையினரது பங்களிப்புடன் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 11 ஆவது படைப் பிரிவிற்குரிய 3 ஆவது சிங்கப் படையணி மற்றும் அரச ஊழியர்களின் பங்களிப்புடன் நுவரேலியா நகர பகுதியில் இம் மாதம் 7 ஆம் திகதி டெங்கு ஒழிப்பு பணிகளை முன்னிட்டு சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த பணிகள் மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்தி கொஷ்தா அவர்களது எண்ணக்கருவிற்கமைய, 11 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜாலிய சேனாரத்ன அவர்களது வழிக்காட்டலின் கீழ் 3 ஆவது சிங்கப் படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் டப்ள்யூ.ஏ.எம் ரன்திலக அவர்களது தலைமையில் இந்த டெங்கு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.Running Sneakers | New Balance 327 Moonbeam , Where To Buy , WS327KB , Worldarchitecturefestival