13th July 2020 23:07:06 Hours
பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன, முன்னாள் இராணுவத் தளபதி, ஜெனரல் (ஓய்வு) தயாரத்நாயக்க மற்றும் முப்படை சேவை அதிகாரிகள் மற்றும் படையினர்கள் உட்பட, மகா சங்க உறுப்பினர்கள் மற்றும் மத குருமார்கள், தேசபக்தர்கள், அறிஞர்கள், மரணித்த போர்வீரர்களின் உறவினர்கள் உட்பட அனைத்து அழைப்பாளர்கள், மத்தியில் 1990 ஆம் ஆண்டு ஜூன் 27 முதல் 11 ஜூலை வரை இடம் பெற்ற எல்.டி.டி.ஈ பயங்கரவாதிகள் தாக்குதலின் போது புகழ்பெற்ற கொக்காவில் ஒலிபரப்ப செய்தி கோபுரம் மற்றும் இராணுவ முகாமை பாதுகாப்பதற்காக மிக உயர்ந்த தியாகத்தை செய்த போர் வீரர்களின் நினைவுகளை நினைவு படுத்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்வானது (11) ஆம் மாலை கொழும்பு 7 இல் அமைந்துள்ள மேற்கு மாகாண கலாச்சார மைய கேட்போர் கூடத்தில் (நாடா) இடம்பெற்றது.
1990 ஆம் ஆண்டு கொக்காவில் பிரதேசத்தில் இடம் பெற்ற யுத்தத்தில் உயிர் தியாகம் செய்த வீரர்களின் நினைவுகளை நினைவு படுத்தி அன்றைய மதிப்புமிக்க பரமவீரவிபுஷனய பதக்கம் கேப்டன் சாலிய அலதேனியாவிற்கு வழங்கப்பட்டதுடன், 54 இராணுவ வீரர்கள் மற்றும் 4 சிவில் ஊழியர்கள் கடந்த 30 ஆண்டுகளாக பயங்கரவாதிகளிடம் சரணடையாமல் மிக உயர்ந்த தியாகத்தை செய்துள்ளனர். பயங்கரவாதிகள் முகாமைச் சூழ்ந்த பின்னர் 26 நாட்கள் முற்றுகையிடப்பட்ட காலகட்டத்தில் இடம் பெற்ற கொக்கவில் போர் பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் ஒரு மறக்க முடியாத நினைவாக கருதப்படுகிறது, இது ஆயுதப்படைகளின் வீரத்தின் உண்மையான செயல் மற்றும் அவர்களின் தன்னலமற்ற அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தியது என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.
பிரதம அதிதியான பாதுகாப்பு செயலாளரின் வருகைக்கு பின்னர் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும் மத்தியில் தேசிய கீதம் பாடுதல் மகா சங்க பௌத்த தேரர்களால் 'மாதகவஸ்த்ரா' ஓதுதல் ஆகியன இடம்பெற்றன. பின்னர் அன்றைய பிரதம அதிதி மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட வேறு உறவினர்களால் புகைப்படங்களுக்கு முன் மலர் கொத்துகளை வைத்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டன.
ஆர்யா அறக்கட்டளையின் தலைவரான திரு.சரித் கிரியேல்லாவின் சுருக்கமான வரவேற்பு உரையின் பின்னர், பிரபல பாடகர், தயான் விதாரன, அவர்களால் போரின் முக்கியமான கட்டத்தின் போது இடம் பெற்ற கொக்காவில் அஞ்சலி பாடல் யுத்ததின் உண்மையான அர்த்தங்கள் இனிமையான குரலின் ஊடாக வெளியிடப்பட்டன.
இந் நிகழ்வில் முன்னால் இராணுவத் தளபதி ஜெனரல் (ஓய்வு) தயாரத்நாயக்க அவர்கள் எல்.டி.டி.ஈ பயங்கரவாதிகளை மனிதாபிமான நடவடிக்கைகளின் போது கிழக்கு பிரதேசத்தை போர்களில் இருந்து விடுவிப்பதற்கான உந்து சக்திகளில் ஒன்றின் பின்னால் இருந்தவர் ஆவர், பின்னர் அவர்கள் இராணுவ வீரர்கள் மீது முற்றுகையிட்ட நிகழ்வுகளின் நினைவுகளை சுருக்கமாகக் கூறினார். இலங்கையின் வீர மகன்களால் எடுத்துக்காட்டுகின்ற துணிச்சல், உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு மற்றும் உண்மையான தேசபக்தி மற்றும் பயங்கரவாதிகள் முகாமை சுற்றி வளைத்து, ஒலிபரப்பு கோபுரத்தை குறிவைத்ததுடன் கைப்பற்றும் வரை அவர்கள் முகாமைப் பாதுகாத்த விதம் ஆகியவற்றை பாராட்டி சொற்பொலிவாற்றினார்.
இந்த நிகழ்வின் போது, மரணித்த கொக்கவில் போர் வீரர்களின் உறவினர்களுக்கு கொக்காவில் மரணித்த தங்கள் அன்புக்குரியவர்களின் நினைவாக எண்ணெய் விளக்குகள் ஏற்றப்பட்டதுடன் பரிசுகளும் வழங்கப்பட்டன. மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, அவர்கள் அன்றைய பிரதம அதிதியாகவும் அவர் நம் காலத்தின் மிகவும் போற்றப்பட்ட மற்றும் மதிப்பிற்குரிய போர்வீரர்களில் ஒருவராக இருக்கிறார், பின்னர் எதிர்கால சந்ததியினரின் சிறந்த நலனுக்காக அந்த நினைவுகளைப் புதுப்பிப்பதன் முக்கியத்துவம் தொடர்பாக அனைவருக்கும் உரையாற்றினார். Nike footwear | plain white nike air force ones women high top Colorways, Release Dates, Price , Gov