Header

Sri Lanka Army

Defender of the Nation

08th July 2020 17:05:17 Hours

கிளிநொச்சி பாடசாலைகளில் இராணுவத்தினரால் சிரமதான பணிகள்

கிளிநொச்சி பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில் சமூக நலன்புரி திட்டத்தின் கீழ் டெங்கு ஒழிப்பு பணிகள் 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டி.எம்.எச்.டி பண்டார அவர்களது வழிக்காட்டலின் கீழ் இம் மாதம (4-6) ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்டன.

கிளிநொச்சியில் அமைந்துள்ள ஜோகபுரம் பாடசாலை வளாகத்தில் டெங்கு ஒழிப்பு பணிகள் 653 ஆவது படைத் தலைமையகத்தின் கீழ் அமைந்துள்ள 17 (தொ) இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் படையினரால் சிரமதான பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகளில் இரு அதிகாரிகள் உட்பட 17 படையினர் இணைந்து கொண்டனர்.

அத்துடன் 20 ( தொ) விஜயபாகு காலாட் படையணியின் படையினரால் கிளிநொச்சி அரவிளானந்தன்குளம் அரச கலவன் பாடசாலை வளாகம் கோவிட் – 19 தொற்று நோய் காரணயின்மையால் மீண்டும் பாடசாலை ஆரம்பிக்கும் முகமாக பாடசாலை வளாகம் முழுமையாக கிருமிநாசி மருந்துகள் அடிக்கப்பட்டன.

இந்த பணிகள் 652 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி அவர்களது மேற்பார்வையில் பொதுமக்களது பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். trace affiliate link | Nike SB Dunk High Hawaii , Where To Buy , CZ2232-300 , Worldarchitecturefestival