Header

Sri Lanka Army

Defender of the Nation

05th July 2020 07:00:50 Hours

சுகாதார கட்டுப்பாடு மற்றும் சட்டவிரோத செயல்பாடுகள் தொடர்பான விழிப்புணர்வு

கண்டாவலை சமுர்த்தி அலுவலகத்தில் சுகாதார கட்டுப்பாடு மற்றும் சட்டவிரோத செயல்பாடுகள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி சுகாதார அதிகாரிகள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள். கிராம சேவையாளர்கள் மற்றும் பொது மக்களது பங்களிப்புடன் கடந்த மாதம் 30 ஆம் திகதி இடம்பெற்றது.

இந்த விழிப்புணர்வு நிகழ்வானது 57 ஆவது பாதுகாப்பு படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டி.ஜி.எஸ். செனரத் யாபாவின் வழிகாட்டுதலின் கீழ் 572 ஆவது படை தலைமையகத்தின் தளபதி மற்றும் 1 ஆவது இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரியின் இணை ஒருங்கமைப்பில் இப் பிரதேசத்தில் வாழும் பொதுமக்களின் நலன் கருதி இப் பயிற்சி பட்டறை ஒழுங்குப்படுத்தப்பட்டிருந்தது. இதன் போது தர்மபுரம் பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரி ஒருவரும் கலந்துக்கொண்டு சிவில் பாதுகாப்பு விடயங்கள் தொடர்பாக விரிவுரை ஆற்றினார்.

இது கிராம மக்கள் மற்றும் இராணுவ படையினருக்கு இடையிலான உறவை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்பட்டது.

விழிப்புணர்வு செயலமர்விற்கு பின்னர் படைத் தளபதி கடல் வழியாக களப்பு முனைகளை பார்வையிட்டதுடன் மற்றும் மீன்பிடி சமூகத்தின் உறுப்பினர்களுடன் வெவ்வேறு இடங்களையும் பார்வையிட்டார். Running sport media | Nike Running