Header

Sri Lanka Army

Defender of the Nation

06th July 2020 16:04:04 Hours

படையினரால் திருகோணமலை மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட சிரமதான மற்றும் தொற்று நீக்கும் பணிகள்

22 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் கீழ் உள்ள கிழக்கு பாதுகாப்பு படையினர் மாணவர் சமூகத்தினரை கொவிட்-19 மற்றும் டெங்கு அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாக்கும் முகமாக, திருகோணமலை மாவட்டத்திலுள்ள 52 பாடசாலைகளில் தொற்று நீக்கம் மற்றும் துப்பரவு பணிகளில் ஜூன் 19 – ஜூலை 3 ஆம் திகதிகளில் ஈடுபட்டனர். இந்நிகழ்வில் 100 இற்கும் அதிகமான படையினர் கலந்து கொண்டனர்.

கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதியின் வழிகாட்டலின் கீழ் , 22 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய அவர்களின் கட்டளையிலான 22 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் கீழ் உள்ள 221,222 மற்றும் 223 ஆவது பிரிகேட் படையினர் குறித்த 52 பாடசாலைகளுக்கும் சென்று திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் ஒருங்கிணைப்புடன் தொற்று நீக்கப்பணிகளில் ஈடுபட்டனர்.

திருகோணமலையில் உள்ள பொலிஸார், சேருநுவர,கோமரங்கடவல மற்றும் கந்தளாய் பிரதேசங்களில் சேவைபுரியும் சிவில் பாதுகாப்பு படையினர், பிராந்திய மருத்துவ அதிகாரிகள் , ஆளுநர் செயலக ஊழியர்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் 14 நாட்களாக இராணுவத்தினருடன் இணைந்து இப்பணிகளில் ஈடுபட்டனர். Running sports | Women's Designer Sneakers - Luxury Shopping