Header

Sri Lanka Army

Defender of the Nation

05th July 2020 08:59:50 Hours

மேலும் 5 பேருக்கு கொவிட்-19 தொற்றியுள்ளதாக கொவிட் மையம் தெரிவிப்பு

விமான எண் கியூஆர் 668 விமானம் மூலம் தோஹா தூதரக அதிகாரியுடன் குடும்ப உறுப்பினர்கள் (4) பேர் நேற்று இலங்கைக்கு வருகை தந்தனர். பகரைன் யூஎல் – 202 விமானம் மூலம் 294 பேரும், மாலைத் தீவில் இருந்து யூஎல் 102 விமானம் மூலம் 120 பேர் இன்று (05) ஆம் திகதி காலை இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். இவர்கள் அனைவரும் இலங்கை முப்படையினரால் நிர்வகித்து வரும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர் என கொவிட் – 19 தேசிய தடுப்பு செயல்பாட்டு மையத்தினால் இன்று (05) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் புனானி தனிமைப்படுத்தல் மையங்களில் மொத்தம் 118 பேர் தனிமைப்படுத்தப்பட்டு பிசிஆர் பரிசோதனையின் பின்னர் தனிமைப்படுத்தல் சான்றிதல்களுடன் இன்று (05) தங்கள் வீடுகளுக்கு புறப்படுவர்.

அத்துடன் (05)ஆம் திகதி வரை முப்படையினரால் நிர்வாகித்து வரும் தனிமைப்படுத்தல் மையங்களில் மொத்தம் 18,553 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி, நாடு முழுதும் முப்படையினரால் நிர்வாகித்து வரும் 50 தனிமைப்படுத்தல் நிலையங்களில் , 6,208 நபர்கள் தனிமைப்படுத்தலில் உள்ளனர் என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.

காலை (மு.ப. 6.00) மணியளவில் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 5 வெளிநாட்டவர்கள் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளார் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளை 22 தனிநபர்கள், 15 வெளிநாட்டை சேர்ந்த இலங்கையர்கள் மற்றும் 07 கடற்படை வீரர்கள் சுகமடைந்து இன்று 05 ஆம் திகதி வைத்தியசாலையில் இருந்து தங்களது வீடுகளுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. Running Sneakers Store | Men's Footwear