Header

Sri Lanka Army

Defender of the Nation

30th June 2020 14:30:10 Hours

கொவிட்-19 இற்கு எதிராக படையினரால் பாடசாலைகள் & யாழ் பல்கலைக்கழகத்தில் தொற்று நீக்கி பணிகள்

கொவிட்-19 வைரஸ் அச்சுறுத்தலுக்கு பின்னர் யாழ்பாணத்தில் பாடசாலைகளை மீள்ஆரம்பிக்கும் முகமாக, யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 52 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படையினர் யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய மற்றும் 52 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி ஆகியோரின் வழிகாட்டலில் பாடசாலைகளில் தொற்று நீக்கும் பணிகளை வெள்ளிக்கிழமை 26 ஆம் திகதி முன்னெடுத்தனர்.

மாணவர்களுக்கு சுகாதார சூழலினை ஏற்படுத்தி அவர்களை கொவிட்-19 மற்றும் ஏனைய தொற்று நோய்களில் இருந்து பாதுகாக்கும் நிமித்தம் இடைகாடு, அச்சுவேலி, தொன்டமானாறு,உடுப்பிட்டி, இமயானன் ,மீசாலை,அல்லரை,விடத்தப்பள்ளை,மாதுவில்,கரம்பக்குருச்சி,வரனி, கொடிகாமம், இடைகுருச்சி, மற்றும் பத்தமேனி ஆகிய பாடசாலைகளில் இப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

52 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் கட்டளை அதிகாரிகளின் அறிவுறுத்தலின் பிரகாரம் படையினர் இத்திட்டத்தினை ஒரு நாளில் நிறைவுக்கு கொண்டு வந்தனர்.

அதேவேளை, யாழ் பல்கலைக்கழகத்தின் நிருவாகத்தினரினால் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விடுக்கப்பட்ட வேண்டுகோளிற்கமைய , ஆனந்த குமாரசுவாமி மகளிர் விடுதி- திருநெல்வேலி, பாலசிங்கம் ஆண்கள் விடுதி- திருநெல்வேலி, கொக்குவில் புதிய மகளிர் விடுதி 1&2- கொக்குவில் மற்றும் கொக்குவில் புதிய மகளிர் விடுதி 1 மற்றும் 2 – கொக்குவில் கட்டிடம் மற்றும் அதனை அன்மித்த பகுதிகள் 51 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படையினரால் தொற்று நீக்கம் செய்யப்பட்டன.

யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வணிகசூரிய அவர்களின் வழிகாட்டுலுக்கமைய, படையினரால் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரின் ஒத்துழைப்புடன் தொற்று நீக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. Running sport media | nike air barkley posite 76ers shoes for women Maximum Volume DJ4633-010 Release Date - SBD