Header

Sri Lanka Army

Defender of the Nation

29th June 2020 21:27:10 Hours

கெமுனு ஹேவா அதன் வர்ணங்களை ‘வர்ண மண்டபத்தில்’ பதிக்கும் நிகழ்வு

ஜனாதிபதி வர்ணங்கள் மற்றும் படையணி வர்ணங்களை பெற்றுக் கொண்ட கெமுனு ஹேவா படையணி குருவிட்ட கெமுனு ஹேவா படை தலைமைய வளாகத்திற்குள் அதன் வர்ணங்களை வர்ண மண்டபத்தில் பதிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை 26 ஆம் திகதி மேஜர் ஜெனரல் சுரஜ் பங்கஜய தலைமையில் இடம்பெற்றது.

வர்ண மண்டப கட்டுமானப் பணிகள் தற்போதைய ரெஜிமென்ட் கர்ணல் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருணா ஜெயசேகர மற்றும் முன்னாள் ரெஜிமென்ட் கர்ணல் மேஜர் ஜெனரல் (ஓய்வு) டபிள்யூஎச்எம் மானதுங்க ஆகியோரின் வழிக்காட்டலில் லெப்டினன் கேனல் எடி ரோட்ரிகோ அவர்களின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்பட்டது.

கெமுனு ஹேவா படையணியின் மத்திய தளபதி பிரிகேடியர் ஏஏடிஎன்எஸ்பி துனுவிலவின் அவர்களின் அழைப்பின் பேரில் இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதியும் இராணுவ பயிற்சி மற்றும் கெமுனு ஹேவா ரெஜிமென்ட் கர்ணலுமான மேஜர் ஜெனரல் சுரஜ் பங்க்சஜய வர்ண்ணங்களை பொறித்த பின்னர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருணா ஜெயசேகர மற்றும் மேஜர் ஜெனரல் (ஓய்வு) டபிள்யுஎச்எம். மானதுங்க உட்பட உயர் அதிகாரிகளின் ஒன்றுக் கூடல் இடம்பெற்றது.

கெமுனு ஹேவா படையணியின் 1ம், 2ம் மற்றும் 3ம் படைகளுக்கு ஜனாதிபதியின் வர்ணங்கள் மற்றும் ரெஜிமென்டல் வர்ணங்கள் வழங்கப்பட்டன. அவர்களின் தேசத்திற்கான உன்னத சேவைகளுக்கும் மிக உயர்ந்த ஒழுக்கத்திற்கும் வழங்கப்பட்டது. மறைந்த ஜனாதிபதி மற்றும் முப்படை சேனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவினால் 1980 ஆகஸ்ட் மாதம் 15 திகதி காலி பொது மைதானத்தில் வழங்கப்பட்டது.

கெமுனு ஹேவா படையணியின் 1ம், 2ம் மற்றும் 3ம் படைகளுக்கு ஜனாதிபதியின் வர்ணங்கள் மற்றும் ரெஜிமென்டல் வர்ணங்கள் மீண்டும் 2012 ஆகஸ்ட் மாதம் 15 கெமுனு ஹேவா படையணி குருவிட்ட கெமுனு ஹேவா படை தலைமையக அணிநடை மைதானத்தில் அப்போதய அதிமேதகு ஜனாதிபதி மற்றும் முப்படைகளின் சேனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ அவர்களினால் வழங்கப்பட்டது. latest Running Sneakers | Men's Footwear