Header

Sri Lanka Army

Defender of the Nation

30th June 2020 13:45:10 Hours

மத்திய பாதுகாப்பு படைத் தளபதி 3ஆவது எஸ்எல்எஸ்ஆர் படையணிக்கு விஜயம்

மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் கீர்தி கொஸ்தா அவர்கள் நுவரெலிய பிரதேசத்தில் அமைந்துள்ள 3ஆவது இலங்கை சிங்க படையணிக்கு , பிரதம அதிதியாக தனது உத்தியோக பூர்வமான விஜயத்தை 29 ஆம் திகதி திங்கட்கிழமை மேற்கொண்டார்.

வருகைத் தந்த மத்திய பாதுகாப்பு படைத் தளபதியவர்கள் 3 ஆவது இலங்கை சிங்க படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் டபள்யு.ஏ.எம். ரணதிலக அவர்களால் வரவேற்கப்பட்டார். மேஜர் ஜெனரல் கீர்த்தி கொஸ்தா அவர்கள் 'லிட்டில் இங்கிலாந்து' என்று அழைக்கப்படும் எல்லையில் உள்ள முகாம் வளாகத்தின் அழகிய நிலப்பரப்பு மற்றும் படையினரால் அலங்கரிக்கப்பட்டுள்ள அதன் மலர் தோட்டம் மற்றும் மர அலங்காரங்களை பார்வையிட்டார்.

படையினர் மத்தியில் உரையாற்றிய பின்னர் , மேஜர் ஜெனரல் கீர்த்தி கொஸ்தா அவர்கள் அனைத்து படையினரின் பங்குபற்றுதலுடன் விருந்தோம்பலில் கலந்து கொண்டார். அதன் பின்னர் அதிதிகள் புத்தகத்தில் சில குறிப்புக்களை எழுதினார்.11 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் டபள்யு.எம்.ஜே.ஆர்.கே.சேனாரத்ன, 112 ஆவது பிரிகேட் தளபதி பிரிகேடியர் ஈ.ஏ.பி எதிரிவீர, மற்றும் ஒரு சில சிரேஷ்ட அதிகாரிகள் மத்திய பாதுகாப்பு படைத் தளபதியின் விஜயத்தில் கலந்து கொண்டனர்.

பின்னர், வருகை தந்த சிரேஷ்ட அதிகாரியவர்கள் பிதுருதலாகல டிரான்ஸ்மிஷன் கோபுரத்தில் பணியாற்றும் 3 ஆவது எஸ்.எல்.எஸ்.ஆர் படையினரை சந்தித்த்தோடு,நுவரெலியா மற்றும் இலங்கையின் மிக உயர்ந்த இடத்தில் அமைந்துள்ள புத்த கோவிலுக்கு மரியாதை செலுத்தினார். short url link | Yeezy Boost 350 Trainers