Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd July 2020 20:16:42 Hours

கொரோனாவிற்கு முகமளிக்கும் படையினரது நலன் கருதி முக கவசங்கள் நன்கொடை

இலங்கை இராணுவ தொண்டர் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுராஜ் பங்ஷஜயா அவர்களின் ஒருங்கிணைப்பின் மூலம் பிரபல தொழிலதிபர் திரு நிஹால் விக்ரமசிங்க அவர்களினால் முப்படையினருக்கு பயண்படுத்தும் முகமாக 18,000 முக கவசங்கள் நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டன. இந்த நன்கொடைகள் கொவிட் மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களுக்கு இம் மாதம் (29) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.

பாதுகாப்பு படையினரது அர்ப்பணிப்பு மற்றும் தேசிய தேவை நிமித்தம் இந்த பொருட்கள் நன்கொடையாளரான திரு நிஹால் விக்ரமசிங்க அவர்களினால் இராணுவ தளபதிக்கு இராணுவ தலைமையகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.

இராணுவ தளபதி இச்சந்தர்ப்பத்தில் நன்கொடையாளருக்கு நன்றிகளை தெரிவித்து வாழ்த்துக்களையும் தெரிவித்தார். இச்சந்தர்ப்பத்தில் தொண்டர் படையணியின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுராஜ் பங்ஷஜயா அவர்களும் இணைந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். jordan release date | nike fashion