27th June 2020 18:01:31 Hours
கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார அவர்களின் வழிகாட்டுதலின் பிரகாரம் 23 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் கீழ் உள்ள 233 ஆவது பிரிகேட் படைத் தலைமையகத்தின் படையினர் 3 லட்சம் பெறுமதியான 153 உலர் உணவுப் பொதிகளை மதுரங்கேணிக்குளம் கிராமத்தில் வசிக்கும் வரிய குடும்பங்களுக்கு செவ்வாய்க்கிழமை 23 ஆம் துகதி வழங்கி வைத்தனர். இதற்கு மட்டக்களப்பில் உள்ள 306 C2 லயன்ஸ் கிளப்பின் உறுப்பினர்கள் அனுசரனை வழங்கினர். படையினரினால் ஆரம்பிக்கப்பட்ட இவ்வினியோகமானது குஞ்சங்குளத்திலுள்ள கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதொடு, 23 ஆவது பாதுகாப்பு படைப் பிவின் படைத் தளபதி தம்மிக்க ஜயசுந்தர , 233 ஆவது பிரிகேட் படைத் தளபதி பிரிகேடியர் ராஜனித் எளிவிட்டிகல ,சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினர் அகியோரும் கலந்து கொண்டனர். 306 C2 லயன்ஸ் கிளப்பின் உறுப்பினர்கள் மற்றும் நலன் விரும்பிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் இறுதி நேரத்தில் இராணுவத்தினால் விருந்தோம்பல் அளிக்கப்பட்டன. என்பது குறிப்பிடத்தக்கத . affiliate tracking url | M2k Tekno