Header

Sri Lanka Army

Defender of the Nation

27th June 2020 18:20:31 Hours

232 ஆவது படைப் பிரிவினால் வாழ்வாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தினருக்கு உதவிகள்

23 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்மிக ஜயசுந்தர அவர்களது வழிக்காட்டலின் கீழ் கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பதவிநிலை பதவியிலிருக்கும் கேர்ணல் சுபத் சஞ்ஜீவ அவர்களது தலைமையில் தெஹிகத்தகண்டிய பிரதேச செயலக பிரிவின் கீழ் வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்த 50 நபர்களுக்கு உலருணவு பொதிகள் இம் மாதம் (23) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.

இந்த உலருணவு பொருட்கள் லண்டனிலுள்ள டொக்டர் ஹயான் வெடவத்த, அவுஸ்திரேலியாவிலுள்ள டொக்டர் நிலுப உடவத்த, லண்டனிலுள்ள செல்வி அவந்தி அன்ஹம்மன, அவுஸ்திரேலியாவிலுள்ள செல்வி இரோஷினி தசநாயக, லண்டனிலுள்ள திரு. மற்றும் திருமதி ஏ. டி சில்வா, லண்டனிலுள்ள டொக்டர் அநுபா மானேவா, டொக்டர் ஹிமாலி சோமவீர, திரு சாஹர களுதொட்டஹே மற்றும் அமெரிக்காவிலுள்ள செல்வி எரந்ததி ராஜகருணா போன்றோரது நிதி உதவியுடன் வழங்கி வைக்கப்பட்டன.

கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் செனரத் பண்டார அவர்களது எண்ணக்கருவிற்கமைய 232 ஆவது படைத் தலைமையகத்தின் பூரன ஏற்பாட்டில் கதிரபுர, பம்பரவன, சூரிய பொகுன, ஹேனானிஹல மற்றும் மாவனவெல கிராமத்தைச் சேர்ந்த வாழ்வாதாரத்தில் பின் தங்கிய குடும்பித்தினருக்கு தெஹிஹத்தகன்டிய சாலிக மண்டபத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன. இந்த உதவிகள் சமூக நலன்புரி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டன.

இந்த சமூகம் சார்ந்த அதிகாரமளித்தல் திட்டம் சமூகத்தின் அந்த ஏழை பிரிவுகளின் வாழ்வாதாரத்தை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு முயற்சியாகும். இந்த நிகழ்வில் 232 ஆவது படைத் தலைமையகத்தின் படைத் தளபதி பிரிகேடியர் வசந்த லியனவடுகே உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படையினர் பலர் கலந்துகொண்டனர். latest Nike Sneakers | Autres