Header

Sri Lanka Army

Defender of the Nation

27th June 2020 18:10:31 Hours

682 ஆவது படையினரால் சமூக நலன்புரித் திட்டங்கள்

முல்லைத்தீவிலுள்ள பின்தங்கிய குடும்பத்தினரது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் உள்ள 68 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவு மற்றும் 682 ஆவது படைத் தலைமையகத்தின் பூரன ஏற்பாட்டில் இம் மாதம் 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலிகதீவு கிராம சேவக உத்தியோகத்தர் பிரிவில் வசிக்கும் 30 குடும்பங்களுக்கு 90 தென்னங்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.

682 ஆவது படைப் பிரிவின் வேண்டுகோளின் பேரில் தென்னை அபிவிருத்தி சபை மற்றும் அதில் சேவையாற்றும் புதுகுடியிறுப்பு அதிகாரிகள் ஒன்றிணைந்து தென்னங்கன்றுகளை பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளப்பட்டன.

இந்த சமூக திட்டத்தின் கீழ் மண்டுவில் கிராம சேகவ உத்தியாகத்தர் பிரிவில் நீர் இல்லாமல் கஷ்ட்டப்படும் ஒரு குடும்பத்தினருக்கு படையினர்களால் குடிநீர் நிமித்தம் கிணறு வெட்டிக் கொடுக்கப்பட்டன. அத்துடன்அப்பகுதியில் உள்ள சமூகத்தினருக்கு பயிர்செய்கைக்காக போஞ்சி மற்றும் வெண்டிக்காய் போன்ற காய்கறி விதைகளை இலவசமாக வழங்கி வைத்தனர். இந்த திட்டமானது முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தீப்தி ஜயதிலக, மற்றும் 66 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் ரத்நாயக்க ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில் மேற்கொள்ளப்பட்டன.

பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவத் தளபதியின் திட்டத்திற்கமைய 682 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி கேர்ணல் சமிந்த கலப்பதி மற்றும் 4 ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் கட்டளை அதிகாரி மற்றும் பொதுமக்கள் இணைந்து இந்த திட்டங்களை மேற்கொண்டனர். bridge media | Nike Dunk - Collection - Sb-roscoff