Header

Sri Lanka Army

Defender of the Nation

29th June 2020 20:13:24 Hours

இலங்கை இராணுவம் தயாரித்த குளிரூட்டப்பட்ட யுனிபப்பல்ஸ் கப்பலில் மாலி-புறப்பட தயார்

இலங்கை இராணுவ மின்சார மற்றும் பொறியியல் இயந்திர படையணி (SLEME) படையினரால் இராணுவ புதிய கண்டுபிடிப்புகளில் மற்றொரு மைல்கல்லை பதித்துள்ளது, அந்த வகையில் இலங்கை இராணுவ மின்சார மற்றும் பொறியியல் இயந்திர படையணியின் படையினர் தயாரித்த 9 நவீன மயமாக்கப்பட்ட யூனிபபல் வாகனங்கள், ஒரு மீட்பு வாகனம் மற்றும் 3 கொள்கலன்களை கப்பல் ஊடக மேற்கு ஆபிரிக்காவில் நிலத்தால் சூழப்பட்ட தேசமான மாலியில் பணியாற்றும் இலங்கையின் ஐ.நா அமைதி காக்கும் படையினருக்காக அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியும் மற்றும் கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இன்று காலை (26) ஆம் திகதி இராணுவ தலைமையகத்தில் அந்த வாகனங்கள் மற்றும் உதிரி பாகங்களை பார்வையிட்டார். அவற்றை கப்பலில் அனுப்பும் ஏற்பாடுகளுக்காக பென் லைன் ஷிப்பிங் ஏஜென்சிகள் (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் முகாமையாளர் திரு ரஹிலீன் பூராமுக்கு கையளித்தார்.

இலங்கை இராணுவ மின்சார மற்றும் பொறியியல் இயந்திர படையணியின் படையினரின் தொழில்நுட்ப நிபுணத்துவத்தைப் பயன்படுத்தி உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கண்ணிவெடி-எதிர்ப்பு வாகனங்கள் மற்றும் உபகரணங்கள், ஐ.நா. விவரக் குறிப்புகளுடன் பொருந்தக்கூடிய வகையில் சர்வதேச தரங்களுக்கு இணையாக உதிரிபாகங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுவதால், அரசாங்கத்திற்கும் இராணுவத்திற்கும் ஒரு பெரிய அந்நிய செலாவணியை சேமிக்கிறது. பல ஆண்டுகளாக தென்னாப்பிரிக்க வாகனங்களுக்கு ஒத்ததாக அந்த வாகனங்களை உற்பத்தி செய்வதில் இலங்கை இராணுவ மின்சார மற்றும் பொறியியல் இயந்திர படையணி முக்கிய பங்கு வகிக்கிறது.

இதன் போது ஊடகவியலாளர்களுக்கு பேசிய பிரதம அதிதி அவர்கள், மாலியில் ஐ.நா. கடந்த இரண்டு ஆண்டுகளில் படையினர்களுக்கு கிடைக்கக்கூடிய அத்தகைய வாகனங்களின் எண்ணிக்கை குறித்து ஐ.நா.வுடன் ஒரு புரிந்துணர்வை எட்டியுள்ளோம். முன்னதாக, இறக்குமதி செய்யப்பட்ட WMAZ வாகனங்கள், ஒவ்வொன்றும் சுமார் 40 மில்லியன் டாலர் செலவில் ஐ.நா. படையினர்களுக்காக வாங்கப்பட்டன, அவை மிகவும் விலை உயர்ந்தவை. படைகள் பொதுவாக அந்த வாகனங்களுடன் ஒப்பிடுகையில் எங்கள் திறமையான இராணுவ மின்சார மற்றும் பொறியியல் இயந்திர படையணியின் படையினர் அந்த செலவில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பகுதியை செலவில் இந்த வாகனங்களை இங்கு தயாரிக்க முடிந்தது.

"இந்த யுனிபபெல்கள் WMAZ வாகனங்களுக்கு ஒத்தவை ஆனால் இதில் செல்லக்கூடிய எண்ணிக்கை அதிகம், மேலும் அவை ஐ.நா. தேவைகள் மற்றும் விவரக் குறிப்புகளுக்கு முழுமையாக குளிரூட்டப்பட்டுள்ளது. இந்த வாகனங்களுக்குள் அமர்ந்திருப்பது மிகவும் எளிதானது, மேலும் மாலியில் நடவடிக்கைகள் பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்களை உள்ளடக்கியிருப்பதால் எங்கள் படைகளுக்கு அதிகபட்ச வசதியை உறுதி செய்துள்ளோம். மற்றய யூனிபபல்களைப் போலல்லாமல் ஒவ்வொரு வாகனத்திலும் இரண்டு துப்பாக்கிகளை வைத்திருக்கிறோம், இருப்பினும் ஒரு துப்பாக்கி மட்டுமே மற்றய வாகனங்களில் வசதி செய்யப்படுகிறது. நிபுணத்துவம் பெற்ற எங்கள் படையினர் மாலி மற்றும் பிற வெளிநாடுகளில் பாராட்டத்தக்க கடமைகளைச் செய்கின்றன. கொவிட் -19 நெருக்கடியின் போது, நமது படையினரை வீட்டிலேயே அடைத்து வைக்காமல் நேரத்தை வீணாக்காமல், புதுமைகள் மற்றும் புதிய தயாரிப்புகளின் தொகுப்பை உருவாக்கி உள்ளோம் அவற்றை இங்கு தொடர்ந்து உற்பத்தி செய்தால் மில்லியன் கணக்கில் மீதப்படுத்த முடியும் எங்கள் திறன்கள் தெரிந்து கொள்ளப்பட்டவுடன், எதிர்காலத்தில் வெளி நாடுகளிடமிருந்தும் இதற்க்கான கோரிக்கைகள் வரும் என நாங்கள் நம்புகிறோம், ஏனெனில் யுனிபபல் காலாட்படைக்கு மிகவும் அவசியமான ஒரு துணை ஆயுதமாகும் என லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

தற்போது ஐ.நா அமைதி காக்கும் படையில் 20 அதிகாரிகள் மற்றும் 223 படையினராக மொத்தம் 243 பேர் லெப்டினன்ட் கேணல் நிஹால் காலகே தலைமையில், 65 வாகனங்களுடன் மாலி படையில் சேவை செய்கின்றனர். இந்த வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் இன்று (26) இராணுவத் தளபதியிடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன்பு வியாழக்கிழமை (25) கட்டு பெத்தை வேலை தளத்தில் வெளிநாட்டு பணிப்பாக பணிப்பாளர் மேஜர் ஜெனரல் டபிள்யூ.ஏ.எஸ். வனசிங்க அவர்களால் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டது.

இராணுவ தலைமையகத்தில் உத்தியோக பூர்வ ஒப்படைப்பு விழாவில் முதன்மை பணி நிலை அதிகாரிகள், பணிப்பாக உயர் அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் பங்குபற்றினர். Running sport media | Nike SB Dunk High Hawaii , Where To Buy , CZ2232-300 , Worldarchitecturefestival