Header

Sri Lanka Army

Defender of the Nation

25th June 2020 22:42:17 Hours

மாலிக்கு நவீன மயமாக்கப்பட்ட யூனிகோர்ன்கள்

இறக்குமதி செய்யப்பட்ட உதிரி பாகங்களைக் கொண்டு புதிதாக நவீன மயமாக்கப்பட்ட 9 யூனிகோர்ன் / யூனிபபல் வாகனங்கள், ஒரு மீட்பு வாகனம் மற்றும் 3 கொள்கலன்கள் ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையில் மாலியில் பணியாற்றும் இலங்கை படையினருக்காக அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதன் செயற்பாட்டு தன்மையை ஆராய்வதற்கு வெளிநாட்டு செயல்பாட்டு பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் WASS வனசிங்க கட்டுபெத்த இராணுவ இலத்தினியல் மற்றும் இயந்திர பொறியாளர்கள் (SLEME) வேலைத்தளத்திற்கு வியாழக்கிழமை 25 ம் திகதி விஜயம் செய்தார்.

இந்த யூனிகோர்ன்கள் / யூனிபபல்கள் நவீனமயமாக்கப்பட்டு ஐக்கிய நாடுகளின் தரத்திற்கு தர உயர்த்தப்பட்டு அவை விரைவில் மாலிக்கு கடல் வழியாக அனுப்பப்படவுள்ளன. மேஜர் ஜெனரல் WASS வனசிங்க இராணுவத் தளபதியிடம் உத்தியோகபூர்வமாக கையளிப்பதற்கு முன்னர் இன்று காலை அவற்றை முழுமையாக ஆய்வு செய்தார்.

இந்நிகழ்வில் வெளிநாட்டு செயல்பாட்டு பணிப்பகத்தின் கேர்னல் ஒருங்கிணைப்பு கேர்னல் டிடிஎல்டி ரெய்மண்ட் இராணுவ இலத்திரனியல் பொறியியல் வேலைத் தளத்தின் தளபதி லெப்டினன்ட் கேணல் எச்டிஎன் ஹெட்டிகே மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். Nike shoes | Nike Off-White