Header

Sri Lanka Army

Defender of the Nation

26th June 2020 17:01:13 Hours

பாதுகாப்பு செயலாளர் பிரிகேட் தளபதிகளுக்கு உரையாற்றல்

இன்று 25ம் திகதி பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, பிரிகேட் தளபதிகளுக்கான இலங்கை இராணுவத்திற்கான எதிர்கால மூலோபாயத்தை உருவாக்குதல் 2020 – 2025 மூன்று நாள் பட்டறையில் தனது கருத்துக்களை முன் வைத்தார். நாட்டில் தேசிய பாதுகாப்புத் துறை மற்றும் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களில் முன்னேற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக சிரேஸ்ட தளபதிகளிடம் பாதுகாப்பு அமைச்சு (MoD) என்ன எதிர்பார்க்கிறது என்பதை விளக்கினார்.

பாதுகாப்புப் படைத் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் எண்ணக்கருவிற்கமைவாக பிரிகேட் தளபதிகளுக்கான பட்டறை இராணுவ தலைமையகத்தில் புதன்கிழமை (24) இராணுவத் தளபதியினால் தொடங்கப்பட்டது. இதன் தொடர்ச்சி பாதுகாப்பு அமைச்சில் இன்று தொடறப்பட்டது.

மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குணரத்ன, நாட்டில் கொவிட்-19 தொற்றுநோயைத் தடுப்பதில் அயராது உழைத்தமைக்காகவும், ஆரம்பத்தில் முப்படையின் பங்களிப்புக்காகவும் இராணுவத் தளபதியிடம் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். தனது உரையின் போது, மேஜர் ஜெனரல் (ஓய்வு) குணரத்ன, தேசிய பாதுகாப்பு பாதகம் தொடர்பாக பங்கேற்பாளர்களுக்கு விளக்கமளித்தார் மற்றும் சட்ட அமுலாக்க அதிகாரிகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில் தேவையற்ற சம்பவங்களுக்கு எதிராக சாத்தியமான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக் காட்டினார். ஒரு மூத்த தளபதியாக தனது சொந்த அனுபவங்களை நினைவு கூர்ந்த அவர், நாட்டின் தேசிய பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை பராமரிப்பது ஆகியவற்றின் சிறந்த நலன்களுக்காக ஒவ்வொரு மட்டத்திலும் அவர்களின் கடமைகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். உங்கள் அர்ப்பணிப்பு கடமைகளை மிகவும் பயனுள்ள முறையில் நிறைவேற்றுவது ஒரு சிறந்த உகந்த சூழலுக்கு வழிவகுக்கும், அங்கு உங்களுக்கு கட்டளையின் கீழ் உள்ள படையினருக்கு உங்கள் வழிகாட்டலை நம்பிக்கையுடன் பின்பற்ற முடியும்.

நீங்கள் சரியானதைச் செய்து சரியான முடிவை எடுக்கும் வரை பாதுகாப்பு அமைச்சகம் எப்போதும் உங்களுக்கு ஆதரவாக இருக்கும் என பாதுகாப்பு செயலாளர் வலியுறுத்தினார்.

பொலிஸ் மா(பதில்) அதிபர் திரு சி டி விக்ரமரத்ன கூட்டத்தில் கலந்து கொண்டு பாதுகாப்பு, அமைதி மற்றும் நல்லிணக்கத்தை பேணுவதற்காக தளபதிகள் அந்தந்த பகுதிகளில் உள்ள பொலிஸ் அதிரடிப் படை மற்றும் பொலிஸாருடன் நெருக்கமான தொடர்புகளை பேணுமாறு கேட்டுக்கொண்டார். இந்த கலந்துரையாடலில் தேசிய புலனாய்வுத் தலைவர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ஜகத் அல்விஸ் மற்றும் ஒரு சில அமைச்சு அதிகாரிகள் கலந்து கொண்டனர். Adidas footwear | Nike Air Max