Header

Sri Lanka Army

Defender of the Nation

24th June 2020 10:01:25 Hours

வன்னி பாதுகாப்பு படைத் தளபதி உத்தியோகபூர்வ விஜயம்

வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தம்மிக ஜயசிங்க அவர்கள் 56 ஆவது படைப் பிரிவிற்கு இம் மாதம் (22) ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.

இந்த படைப் பிரிவிற்கு விஜயத்தை மேற்கொண்ட வன்னி பாதுகாப்பு படைத் தளபதியை 56 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.என் அமரசேகர அவர்கள் வரவேற்று பின்னர் வன்னி பாதுகாப்பு படைத் தளபதிக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி படையினரால் அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைத்து வரவேற்கப்பட்டார்.

பின்னர் வன்னி பாதுகாப்பு படைத் தளபதிக்கு 56 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி அவர்களினால் அவரது நிர்வாகத்தின் கீழுள்ள பிரதேசங்களின் கடமை பொறுப்புக்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டன.

அதன்பின் வன்னி பாதுகாப்பு படைத் தளபதி 561, 563 ஆவது படைத் தலைமையகங்களுக்கும் 16 மற்றும் 21 ஆவது சிங்கப் படையணிகளுக்கு விஜயத்தை மேற்கொண்டார். Buy Sneakers | 『アディダス』に分類された記事一覧