Header

Sri Lanka Army

Defender of the Nation

25th June 2020 19:28:37 Hours

இராணுவ தளபதி ‘ரன்வெட’ தங்கவேலி திறப்பு நிகழ்விற்கு பிரதம அதிதியாக பங்கேற்பு

அனுராதபுர ஜெய ஸ்ரீ மகா போதியின் ஒரு பகுதியான விகாரையின் புனித 'போதியைச் சுற்றி புதிதாக அமைக்கப்பட்ட தங்கமுலாம் பூசப்பட்ட வேலி (ரன்வெட) அதனைப்போல் கோகந்தர வடக்கில் அமைந்துள்ள அதுருகிரிய போரி பூரன ஶ்ரீ மஹா விகாரையில் அமைக்கப்பட்ட தங்கவேலி திறப்பு நிகழ்விற்கு பிரதம அதிதியாக கோவிட் மையத்தின் தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதியுமான லெப்படினன்ட ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் இம் மாதம் புதன்கிழமை (24) ஆம் திகதி வருகை தந்து திறந்து வைத்தார்.

போர் பூரன ஸ்ரீ மகா விஹாராதிபதி ருக்மல் தம்மகீர்த்தி நாயக்க தேரர் அவர்களது 50 ஆண்டு கால துறவறத்தை நிறைவு செய்த தினத்தை முன்னிட்டு இந்த தங்கவேலி திறந்து வைக்கப்படும் நிகழ்வு இடம்பெற்றன.

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்த இராணுவ தளபதியை இந்த விகாரையின் விஹாராதிபதி கௌரவத்திற்குரிய ருக்மள் தம்மகீர்த்தி நாயக்க தேரர் அவர்கள் வரவேற்று பின்னர் சமய சம்பிரதாயபடி இந்த நிகழ்வானது ஆரம்பிக்கப்பட்டன.

இந்த பௌத்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்த இராணுவ தளபதி அவர்கள் பிரித் கோஷங்களுக்கு மத்தியில் போதியை சுற்றியுள்ள ‘ரன்வெட’ ரிபன்கள் வெட்டப்பட்டு திறந்து வைத்து பக்தர்களின் வழிபடுகளுக்காக திறந்து வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வில் விஹாராதிபதி மதிப்புக்குரிய ருக்மள் தம்மகீர்த்தி நாயக்க தேரர் அவர்கள் இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக வருகை தந்த இராணுவ தளபதி அவர்களுக்கும் எமது நாட்டின் நிமித்தம் சேவையாற்றிய இராணுவத்தினருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்து எமது நாடானது கோவிட் – 19 தொற்று நோயிலிருந்து விடுபட்டு விரைவில் பழைய நிலைக்கு திரும்பி வரவேண்டும் என்று மத பிறார்த்தனைகளும் இடம்பெற்றன.

இந்த நிகழ்வின் இறுதியில் விஹாராதிபதியினால் இராணுவ தளபதிக்கு நினைவுச் சின்னமொன்று பரிசாக வழங்கி வைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Nike shoes | Nike - Sportswear - Nike Tracksuits, Jackets & Trainers