Header

Sri Lanka Army

Defender of the Nation

25th June 2020 16:11:31 Hours

அழகுபடுத்தப்பட்டு மேம்படுத்தப்பட்ட இராணுவ தலைமையக சூழல் மக்கள் பாவனைக்கு திறந்துவைப்பு

மக்கள் நட்பு மற்றும் சூழல் நட்பு அழகுபடுத்தல் மற்றும் பயன்பாட்டுத் திட்டத்தின் கீழ் பாதுகாப்பு தலைமை பிரதானியும் இலங்கை இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் எண்ணக்கருவின் கீழ் படையினரால் சில மாதங்களில் வெற்றிகரமாக முடிக்கப்பட்ட இராணுவ தலைமையகத்தை அன்மித்துள்ள சூழலானது,பொதுமக்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களின் பாவனைக்காக 22 ஆம் திகதி திங்கள்கிழமை பொதுமக்களின் முன்னிலையில் திறந்துவைக்கப்பட்டது. இந்த நிகழ்விற்கு நகர மேம்பாட்டு அதிகார சபையின் தலைவர் கட்டிடக்கலைஞர் திரு ஹர்ஷன் டி சில்வா அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இராணுவ தளபதியின் 'துரு மிதுரு-நவ ரட்டக்' எனும் திட்டத்தின் 4ஆவது கட்டத்தின் கீழ் இராணுவ தலைமையகத்தினால் சூழலை அழகுபடுத்தும் நிமித்தம் அமைக்கப்பட்ட இந்த பிரம்மாண்டமான அழகுபடுத்தல் சிறுவர் பூங்கா, நடை பயிற்சி பாதை , இரண்டு டி -55 படைக்கலச் சிறப்பனி டாங்கிகள், சூரிய சக்தியில் இயங்கும் தெரு விளக்குகள் கொண்ட 2.6 கி.மீ நீளமுள்ள நடை பயிற்சி பாதையின் வெளிச்ச விளக்குகள் மற்றும் இராணுவ தலைமையகத்திற்கு அருகிலுள்ள திருப்பத்தில் ஒரு பெரிய அலங்கார விளக்குகள் உட்பட அனைத்தும் திறந்து வைக்கப்பட்டன.

உடல் பயிற்சி தேவைகள் மற்றும் புத்துணர்ச்சியூட்டும் நோக்கங்களை எளிதாக்கும் முழு சுற்றுப்புறத்தை அழகாக்கவும் ஒரு நிலப்பரப்பாக மாற்றுவதற்கான இந்த திட்டத்தின் பின்னணியில் இருந்த இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் பாவனையில் இல்லா முழு கரடு முரடான மற்றும் சதுப்பு நிலப்பகுதிகள் தற்போதைய நிலைக்கு மாற்றப்படுவதற்கு முன்னர் தேவையான வழிகாட்டுதல்களை நில மீட்பு மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் நகர மேம்பாட்டு அதிகாரசபைகளிடம் இருந்து அனைத்து உதவிகளையும் பெற்றார். இராணுவத் தளபதியின் வேண்டுகோளுக்கமைய நியமிக்கப்பட்ட நகர மேம்பாட்டு அதிகாரசபையின் தலைவர் திரு ஹர்ஷன் டி சில்வா அவர்கள் வழிகாட்டலில் இராணுவ தலைமையகத்தின் உபகரண மாஸ்டர் ஜெனரல் மேஜர் ஜெனரல் பிரசன்ன சந்திரசேகர அவர்களின் மேற்பார்வையில் இராணுவத்தினரால் இந்த திட்டத்தை ஒரு மகத்தான வெற்றியாக முடிக்கப்பட்டது.

1 ஆவது கட்டத்தின் கீழ் இராணுவத் தலைமையகத்தை நோக்கி170 அரிய வகை தாவரங்களை நடவு செய்தல், 2 ஆவது கட்டத்தின் கீழ் கரடுமுரடான நிலத்தை ,சதுப்பு நிலங்களை மாற்றி 12 ஏக்கரில் நெல் பயிரிடல் , 3 ஆவது கட்டத்தின் கீழ் 2 கி.மீ நடை பயிற்சி பாதை கட்டுமானம் திறந்தவெளி ஜிம்னாசியம் மற்றும் 100 தேங்காய் மரக்கன்றுகளை நடவு செய்தல் ,4 ஆவது கட்டத்தின் கீழ் 2 கி.மீ தூரம் கொண்ட நடை பயிற்சி பாதையினை 600 மீட்டர் வரை நீட்டித்தல் மற்றும் முழு நடை பயிற்ச பாதையின் முழுமையான வெளிச்சம் ,சிறுவர் பூங்கா இணைப்புடன் மூலம் நான்கு கட்டங்களின் கீழ் வடிவமைக்கப்பட்ட முழு திட்டமும் அதன் ஆரம்ப பணிகள் கடந்த ஆண்டு டிசம்பரில் திட்டத்தின் பின்னணியாளரான தளபதியின் பங்களிப்புடன் தொடங்கப்பட்டன. பின்னர், மூன்று கட்டங்களும் கடந்த சில மாதங்களில் நிறைவு செய்யப்பட்ட இறுதிக் கட்டத்தின் இன்றைய தொடக்கத்திற்கு முன்னர் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

இராணுவ தலைமையக சந்தியில் அமைக்கப்பட்ட 8 மீட்டர் உயர அலங்கார விளக்கு, எட்டு 152 மிமீ ஆர்ட்டி சுற்றுகள், எட்டு 130 மிமீ ஆர்ட்டி சுற்றுகள் மற்றும் எட்டு 122 மிமீ ஆர்ட்டி சுற்றுகள் ஆகியவற்றை உள்ளடக்கிய மின்சார பொறிமுறை மற்றும் இயந்திர பொறியாளர் படையணி பணிப்பகம் மற்றும் மின்சார பொறிமுறை மற்றும் கொஸ்கம இயந்திர பொறியியலாளர் படையணி பணிப்பகத்தினால் வடிவமைக்கப்பட்டது. உபகரண மாஸ்டர் ஜெனரல் மற்றும் குறித்த படையணிகளின் கட்டளை அதிகாரிகளின் மேற்பார்வையின் கீழ் மின்சார மற்றும் இயந்திர பொறியியலாளர் மற்றும் பொறியியலாளர் சேவைப் படையணிகளின் படையினர் இந்த திட்டத்திற்கு தங்களது முழுமையான பங்களிப்பினை வழங்கினர். இரண்டு டி 55 ஆர்மர் டாங்கிகள் வைப்பது ஆடம்பரத்தையும் கௌரவத்தையும் குறிக்கிறது, இது இராணுவ சக்தியைக் காண்பிக்கும் இந்த அதிநவீன இராணுவ தலைமையக வளாகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதியின் வேண்டுகோளின் பேரில், பாதுகாப்பு தலைமை பிரதானி இராணுவத் தளபதியு மற்றும் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகளுடன் இணைந்து அன்றைய பிரதம விருந்தினரான திரு ஹர்ஷன் டி சில்வா ஒரு புதிய சிறுவர் பூங்காவைத் திறந்து, புதிய வெளிச்சங்களை மாற்றி, புதிதாக அமைக்கப்பட்ட அழகிய பகுதிகளைப் பார்த்தார்.

உபகரண மாஸ்டர் ஜெனரல் மேஜர் ஜெனரல் பிரசன்ன சந்திரசேகர, மின்சார மற்றும் இயந்திர பொறியாளர்கள் பணிப்பாளர் பிரிகேடியர் இந்து சமரகோன், விவசாய மற்றும் கால்நடைகள் பணிப்பாளர் பிரிகேடியர் இந்திராஜித் கந்தனஆராச்சி, விவசாய மற்றும் பராமரிப்பு பணிப்பாளர் பிரிகேடியர் பிரசாந்த விமலசிறி, 1 ஆவது பொறியியலாளர் படையணியின் கட்டளை அதிகாரி லெப்டினன் கேணல் அசிரி முஹேந்திரம்கே, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். Sport media | Nike News