27th June 2020 16:38:27 Hours
இலங்கை இராணுவத்தின் எதிர்கால மூலோபாயத்தை உருவாக்குதல் 2020 - 2025 இன் ஒரு பகுதியாக பிரிகேட் தளபதிகளுக்கான மூன்று நாள் தொடர் பயிற்சி பட்டறையினை பாதுகாப்புத் பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின்.....
73 க்கும் மேற்பட்ட பிரிகேடியர்கள் பங்குபற்றும் செயலமர்வில் பிரதம அதிதியாக கலந்துக் கொண்ட லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தொடக்க உரையில் சிந்தனையைத் தூண்டும் ஆலோசனைகள் வழங்கினார். செயலமர்வின் நோக்கமானது இராணுவ தலைமையகத்தின் செயல்பாடு மற்றும் நிர்வாக செயல்முறை குறித்த அறிவை வழங்கலும் பிரிகேட் தளபதிகளின் கட்டளை மற்றும் பணியாளர்கள் திறன் விருத்தி தொடர்பான அறிவூட்டலுமாகும்.
இலங்கை புகழ்பெற்ற மூலோபாய விரிவுரையாளரும் நிர்வாக அதிகாரிகளுக்கான பயிற்சியாளருமான கலாநிதி உதயா இந்திரரத்ன மூன்றாவது முறையாக அமர்வுகளை நெறிப்படுத்தினார். உலகமயமாதலுக்கமைவாக நில அச்சுறுத்தல் மற்றும் பாதுகாப்பு தொடர்பாக இலங்கை இராணுவத்தின் எதிர்கால மூலோபாயத்தை 2020 – 2025 உருவாக்குதல் பற்றிய விவாதிக்கப்பட்டன.
லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தனது உரையில் முதலில் நாட்டின் ஒழுக்கமான பொது மக்களுக்கும் கொவிட் 19 பரவலைத் தடுப்பதற்கு உரிய நேரத்தில் சரியான முடிவை எடுத்தமைக்காக அதிமேதகு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ, கௌரவ பிரதமர் மற்றும் இலங்கை அரசு ஆகியோருக்கும் நன்றி செலுத்தினார். கௌரவ சுகாதார அமைச்சர் திருமதி பவித்ரா வன்னியராச்சி மற்றும் அவரது குழுவை அதன் பரவலைத் தடுப்பதில் அயராது பாடுபட்டமைக்கு பாராட்டினார். அத்தோடு இராணுவத்தின் அனைத்து நிலையினருக்கும் இரவும் பகலும் பெரிதும் பங்களித்த எங்கள் இரு சகோதரி சேவைகளான கடற்படை மற்றும் வான் படைக்கும் பாராட்டுக்களை தெரிவித்தார்.
கொவிட் 19 கட்டுப்படுத்தல் பொறுப்புகள் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட போது, பலர் சந்தேகப்பட்டார்கள், அதனை வேறு கோணத்தில் பார்த்தார்கள். ஆனால் எங்கள் சகோதரி சேவைகளுடன் நாங்கள் அந்த பணியைச் செய்ய வல்லவர்கள் என்பதை நிரூபித்தோம், இந்த நாட்டு மக்களுக்கு சரியான செய்தியை கொண்டு ஊடாகங்கள் சிறப்பான ஆதரவு வழங்கியமைக்கு நன்றி தெரிவித்தார்.
ஜனாதிபதி ஒரு முன்னாள் இராணுவ அதிகாரியாக இருந்தவர் தேசத்திற்கு வீர பணியாற்றியவர் போர்க்களத்தில் இருந்த தற்போதைய பாதுகாப்பு செயலாளர் பாதுகாப்புப் படைகள் மீது, குறிப்பாக இலங்கை இராணுவத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார். ஜனாதிபதியும் பாதுகாப்பு செயலாளரும் முன்னாள் இராணுவ அதிகாரிகள் மட்டுமல்ல, அவர்கள் சிறந்த தலைவர்கள், தளபதிகள், அதிகாரிகள் மற்றும் முழுமையான பண்புள்ளவர்கள், அவர்கள் துறைகளில் போராடி தங்கள் தலைமையை நிருபித்தவர்கள். இந்த அமைப்பை மேம்படுத்த அவர்கள் சாத்தியமான ஒவ்வொரு மட்டத்திலும் உதவுகிறார்கள். ஆகவே, தேசத்தை மீண்டும் கட்டியெழுப்புவதில் பிரமாண்டமான பணிகள் நம் தோள்களில் உள்ளன, மேலும் இந்த தேசத்திற்கு எங்களது சேவையை நம்முடைய முழு பலத்தினாலும் வழங்க வேண்டியது அவசியம்.
"நாங்கள் மிகப்பெரிய மனித மூலதனத்தைக் கொண்ட மிக முக்கியமான அமைப்பு செயல்பாட்டு மற்றும் நிர்வாக செயல்பாடுகளில் அதிகபட்ச நன்மைகளைப் பெறுவதற்கு திறம்பட நிர்வகிப்பது ஒரு கடினமான பணியாகும்.
முழு உரையும் கீழ் வருமாறு:
இந்த நிகழ்வில் லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா உரையாற்றுகையில் ஒரு பிரிகேட்டுக்கு கட்டளையிடும் போது மூன்று கட்டளை பண்புகளை நினைவுபடுத்தினார் நீங்கள் ஒரு பிரிகேடியராக உங்கள் சிரேஸ்டத்துவம் மீது மட்டுமல்ல உங்கள் செயல்திறன், விளைத்திறன் மற்றும் ஒருமைப்பாடு காரணமாக தேர்வு செய்யப்பட்டுள்ளீர்கள். பரந்த திறன்களைக் கொண்ட உங்கள் அதிகாரத்தில் தகமை, இராஜதந்திரம், ஒருவருக்கொருவர் திறன்கள், சூழ்நிலை விழிப்புணர்வு மற்றும் தொடர் கற்றல் ஆகியவை இருக்க வேண்டும். மிக முக்கியமாக, அர்ப்பணிப்பு மற்றும் விசுவாசத்துடன் கடமைக்கு அப்பால் உங்கள் சேவை பரந்துப்பட வேண்டும் என சுட்டிக்காட்டினார்.
அதிமேதகு ஜனாதிபதி தேசத்திற்கு சேவை செய்த வீரமிக்க ஒர் இராணுவ அதிகாரி நமது தேசத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான பிரமாண்டமான பணியைச் செய்ய. தற்போதைய பாதுகாப்பு செயலாளர் பாதுகாப்புப் படையினர் மீது குறிப்பாக இலங்கை இராணுவம் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளார் எனவே தேசத்திற்கு எங்கள் சேவையை முழு பலத்துடன் வழங்க வேண்டியது அவசியம்.
தனது உரையில் தொடர்ந்து லெப்டினன்ட் ஜெனரல் சில்வா நீங்கள் உங்கள் அதிகாரத்தை பகிரந்தளிக்கலாம் ஆனால் அவர்களின் செயல், பொறுப்பு மற்றும் பொறுப்புக்கூறலில் இருந்து நீங்கள் ஒருபோதும் விலக முடியாது. உங்களுக்கு கீழ் உள்ளவர்களின் செயல்களைச் சரிசெய்வது உங்கள் பொறுப்பு. சிறந்த கட்டளையின் கலை தலைமைத்துவத்தில் தலையிடாமல் நீங்கள் விரும்பியதை அடைய கீழ் உள்ளவர்களை உங்கள் பாதையில் வைத்திருப்பது. இது ‘மேற்பார்வை கலை’ என்று அழைக்கப்படுகிறது. இரண்டாவதாக நாம் இன்று நேரடியாக இணைக்கப்பட்ட உலகில் இருக்கிறோம், எந்தவொரு கெட்ட செய்தியையும் பல ஆண்டுகளாக கடினப்பட்டு வென்ற இராணுவத்தின் உருவத்தை கெடுக்க எதிரிகளால் கையாள முடியும். எந்தவொரு தவறான செயலிலும் ஈடுபட வேண்டாம் என்று படையினருக்கு பிரசங்கிப்பது மட்டும் போதாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் சிக்கலைத் தெரிந்து கொண்டு அவ்வாறு செய்வதற்கான காரணங்களைத் தீர்க்க வேண்டும். இது உங்கள் பிரதான கடமையாகும். வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் நலனைக் கவனிப்பதே தலைவர்களின் பிரதான கடமையாகும் என அவர் மேலும் கூறினார்.
நாங்கள் மிகப்பெரிய மனித வளம் கொண்ட மிக முக்கியமான அமைப்பு, செயல்பாடு மற்றும் நிர்வாகங்களில் அதிகபட்ச நன்மைகளைப் பெறுவதற்கு திறம்பட நிர்வகிப்பது ஒரு கடினமான பணியாகும். நீங்களும் உங்கள் பணியாளர்களும் இலங்கை இராணுவத்தின் பணிப்பக செயல்பாடுகள் நிர்வாக அமைப்பு மற்றும் பொருத்தமான விடயங்களுக்கு பரீட்சியமானவர்களாக இருப்பீர்களேயானால் யாரையும் கடிதங்களின் செல்லுபடியையும் நான் சில சந்தேகிக்க வேண்டியதில்லை. இன்று நான் செய்வது போல் உங்கள் தலைமையகத்திலும் உருவாக்கினால் சிறப்பு. .
லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா மேலும் தனது உரையில் பொது வரி செலுத்துவோரிடமிருந்து நாம் பெறும் ஒவ்வொரு சதத்தையும் நியாயமான வகையில் நன்கு வடிவமைக்கப்பட்டு செயல்படுவது மிகவும் அவசியம். தலைவருக்கும் முகாமையாளருக்கும் உள்ள வித்தியாசத்தை உங்களுக்கு நினைவூட்டுகிறேன். முகாமையாளர் சரியான காரியங்களைச் செய்கிறார். தலைவர் ஒரு பரந்த களத்தில் சரியானதை செய்கிறார். பிரிகேட் தளபதிகளாகிய நீங்கள் இந்த இரண்டு பாத்திரங்களின் குணங்களையும் வேறுபடுத்தி தேவைக்கேற்ப செயல்பட வேண்டும்.
நான் முன்பு குறிப்பிட்டது போன்று எங்கள் நாட்டின் முதுகெலும்பாக நாங்கள் மாறிவிட்டோம். அவர்கள் செய்யும் எல்லாவற்றிற்கும் இராணுவ ஆதரவைப் பெற எங்கள் மக்கள் தயாராக உள்ளனர். எதிர்காலத்திலும் அவர்களின் பாதுகாவலர்களாக நாங்கள் தொடர்ந்தும் இருப்போம் என்று மக்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. நாங்கள் என்ன செய்கிறோம் எவ்வாறு செலவிடுகின்றோம் என பல பருந்து கண்கள் பார்த்துக் கொண்டிருகின்றன எனவே ஒரு குறிப்பிட்ட பணியைச் செய்யும் போது இராணுவ நன்மதிப்பிற்கான தன்மையை பேண வேண்டும்.
தற்போதைய சூழல் நன்கு ஆராயப்பட்ட சிவில் இராணுவ ஒருங்கிணைப்பு தேவைப்படுகின்றது. நீங்கள் நன்கு அறிந்த மற்றும் அனுபவம் வாய்ந்தவராக இருப்பதால் சிவில் இராணுவ உறவு முடிவற்ற நடவடிக்கை ஆகும். பொது மக்களுடனான தொடர்புகளை கையாள்வதில் தலைவர்கள் தொழிலான்மை இராஜதந்திரம் ஒழுக்கம் மற்றும் அனுதாபம் ஆகியன அவசியம் என கூறப்படுகின்றது.
தொழிற்தகமை, விழிப்புணர்வு , உறுதிப்பாட்டு சக்தி , தயார் நிலை ஆகியவை சில சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுக்க உதவும் என்று நான் நம்புகிறேன். நாங்கள் இதுவரை சிறப்பாக செயல்பட்டுள்ளோம், பாதுகாப்புத் பிரதானி மற்றும் இராணுவத் தளபதி என்ற வகையில் என்னால் சிறப்பாக செயற்பட முடிந்தது என்பதில் உறுதியாக உள்ளேன்.
யுத்த களத்தின் அவசியம் காரணமாக உங்களில் பலருக்கு இராணுவத் தலைமையகத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதை நான் அறிவேன். எவ்வாறாயினும், பிரிகேட்களை முறையாகச் செயல்படுத்துவதற்கு இராணுவ தலைமையக நிர்வாக மற்றும் விநியோகம் உங்களுக்கு உதவும் என இராணுவத் தளபதி முடித்தார்.
இலங்கை புகழ்பெற்ற மூலோபாய விரிவுரையாளரும் நிர்வாக அதிகாரிகளுக்கான பயிற்சியாளருமான கலாநிதி உதயா இந்திரரத்ன பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ஜகத் குணவர்தன, பிரதி பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் ரசிக பெர்னாண்டோ, பதவி நிலை சிரேஸ்ட அதிகாரிகள், சிரேஸ்ட அதிகாரிகள் ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டனர். Running Sneakers Store | Releases Nike Shoes