24th June 2020 08:01:25 Hours
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரால் கோபாய் தியாகி நற்பணி மன்றத்தின் நிறுவனர் மற்றும் தலைவரான திரு. வாமதேவ தியாகேந்திரன் வழங்கிய நிதியுதவியுடன், ஒரு ஏழைக் குடும்பத்திற்கு புதிய வீட்டைக் நிர்மாணித்து 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கையளிக்கப்பட்டது.
கோப்பாய் யோகேந்திரன் யோகிக்கான வீட்டை யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வனிகசூரிய நிலம் மற்றும் கட்டுமானத்திற்கு தேவையான மூலப்பொருட்களை நன்கொடையாக வழங்கிய நன்கொடையாளர் திரு. வாமதேவ தியாகேந்திரனுடன் இணைந்து திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து இந்து சமய வழிபாடும் பயனாளிக்கு விசேட அன்பளிப்பும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த திட்டமானது 51 வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் லலித் ரத்நாயக்க அவர்களின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் 51 வது படைப்பிரிவு தளபதி, யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொது பணி அதிகாரி, 511 வது படைத் தளபதி, சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். Mysneakers | Converse Chuck Taylor All Star Translucent - Women Shoes - 165609C