Header

Sri Lanka Army

Defender of the Nation

23rd June 2020 13:08:30 Hours

57 ஆவது படைப் பிரிவினரால் பொதுமக்களின் பிரச்சினை தொடர்பான மாநாடு

நீர்வளங்கள், நீர்ப்பாசனத் தேவைகள், பேரிடர் முகாமைத்துவம் மற்றும் பிற உள்கட்டமைப்பு விவகாரங்கள் தொடர்பான சமூகங்களின் முக்கிய பிரச்சினைகளைத் தீர்ப்பது தொடர்பாக 57 ஆவது பாதுகாப்புப் படைப் பிரிவுத் தலைமையகத்தினால் அதிகாரிகள் ஒருங்கிணைப்பு மாநாடு 571 ஆவது பிரிகேட் தலைமையகத்தில் வியாழக்கிழமை 18 ஆம் திகதி ஏற்பாடு செய்யப்பட்டது.

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த குணரத்ன அவர்களின் அறிவுறுத்தலின் கீழ் 57 ஆவது பாதுகாப்புப் படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத்யாபா அவர்களின் வழிகாட்டலின் கீழ் கிளிநொச்சியில் தற்போது காணப்படும் வளர்ச்சித் தேவைகள், குடிநீர் மற்றும் நீர்ப்பாசன மேம்பாட்டு திட்டங்கள்,வெள்ளம் மற்றும் பேரழிவு அச்சுறுத்தல்கள் தொடர்பாக இம்மாநாட்டில் ஆராயப்பட்டன.

கிளிநொச்சியில் உள்ள அரச நிறுவனங்களின் தலைவர்கள், பிராந்திய முகாமையாளர்கள் , நீர் வழங்கல் அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட பொறியாளர், பிராந்திய நீர்ப்பாசன அலுவலகத்தின் பொறியாளர்கள் மற்றும் பேரிடர் முகாமை மையத்தின் பிரதி பணிப்பாளர் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் குறித்து ஆழமாக விவாதித்தனர்.

மேலும், சம்பந்தப்பட்ட அனைத்து சிக்கல்களுக்கும் தேவையான உதவிகளை பெற்றுக்கொள்ள 57 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவு தலைமையகத்திற்கு தெரிவிக்க கூட்டத்தில் கோரப்பட்டது. அதே நேரத்தில், இப்பகுதியில் சமூகம் தொடர்பான திட்டங்களுக்கு 57 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் தொடர்ச்சியான பங்களிப்பை அதிகாரிகள் பாராட்டினர்.

57 ஆவது பாதுகாப்புப் படைப் பிரிவின் படைத் தளபதியின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வை 571 ஆவது பிரிகேட் தலைமையகத்தின் தளபதி பிரிகேடியர் டி.கே.எஸ்.கே தொலகே அவர்கள் ஒருங்கிணைத்தார். 572 ஆவது பிரிகேட் தலைமையகத்தின் தளபதி , 57 ஆவது பாதுகாப்புப் படைப் பிரிவின் பதவி நிலை அதிகாரிகள், 571 ஆவது பிரிகேட் தலைமையகத்தின் பட்டாலியன் தளபதிகள் உள்ளிட்டோர் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர். Sports brands | nike air speed turf rose gold price per gram