15th June 2020 20:43:03 Hours
உமா ஓயா பல்நோக்கு மேம்பாட்டுத் திட்ட கட்டுமானப் பணிகளைத் தொடர 15 ஆம் திகதி வருகை தந்த 85 ஈரானியர்களுக்கான தனிமைப்படுத்தல் வசதிகளை பார்வையிடும் நிமித்தம் மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் கீர்த்தி கொஸ்தா அவர்கள் உமா ஓயா திட்ட காரியாலய எல்ல பகுதிக்கு சில சிரேஸ்ட அதிகாரிகளுடன் விஜயம் செய்தார்.
விஜயத்தின் போது மத்திய தளபதி அவர்கள் திட்டத்தின் வதிவிட முகாமையாளர்கள், ஈரானிய ஆலோசகர் மற்றும் திட்ட அலுவலகத்தில் சுகாதார அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டத்திற்கு முன்னதாக வசதிகள், தனிமைப்படுத்தல் செயல்முறை மற்றும் நிர்வாக தொடர்பான விடயங்களை ஆராய்ந்தார். இங்கு வந்துள்ள ஈரானியர்கள் தங்களது பி.சி.ஆர் சோதனைகளின் முடிவுகளுக்காக தற்காலிகமாக நீர்கொழும்பில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். Sports brands | 2021 New adidas YEEZY BOOST 350 V2 "Ash Stone" GW0089 , Ietp