Header

Sri Lanka Army

Defender of the Nation

16th June 2020 15:30:46 Hours

கிளிநொச்சி படையினர்களுக்கு "ஆழ்ந்த மனம் மற்றும் உணர்தல்"தொடர்பான விரிவுரை

பாதுகாப்பு தலைமை பிரதானி மற்றும் இராணுவ தளபதியான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனைக்கமைவாக உளவியல் பணிப்பகத்தினால் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் பணியாற்றும் அதிகாரிகளின் மன நலனை மேம்படுத்துவதற்கான பயிற்சி பட்டறை நடாத்தப்பட்டன.

குறித்த விரிவுரைகளானது உளவியல் நடவடிக்கை பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் மஞ்சுள கருணாரத்ன அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் பணியாற்றும் அதிகாரிகளின் மற்றும் படையினர்களின் இராணுவ வீர மற்றும் வீராங்கனைகளின் சக்தியை ஊக்குவிப்பதற்கும், அகநிலை இடையே ஊடுருவக்கூடிய அம்சங்களில் எண்ணங்களை வளர்ப்பதற்காக. மற்றும் வாழ்க்கை இலக்குகளை அடைவதற்கான புறநிலை மாற்றங்கள் ஆகியவற்றை தெழிவு படுத்தும் நிமித்தம் இந்த பட்டறை நிகழ்த்தப்பட்டன.

இவ் விரிவுரையானது (17) ஆம் திகதி புதன்கிழமை கிளிநொச்சி நெலும்பியச கேட்போர் கூடத்தில் இடம் பெற்றன.

உளவியல் நடவடிக்கை பணிப்பகத்தின் லெப்டினன் கேணல் பி.ஜி.எஸ் சமந்தி மற்றும் மேஜர் டி.பி.ஜி.கே அல்விஸ் ஆகியோரினால் இவ் விரிவுரையானது நடாத்தப்பட்டன.

இந்த பயிற்சி பட்டறையில் 50 அதிகாரிகள் மற்றும் 100 படையினர் பங்கேற்றனர். Asics shoes | Jordan Release Dates , Iicf