Header

Sri Lanka Army

Defender of the Nation

18th June 2020 22:37:18 Hours

இந்தியாவில் இருந்து வருகை தந்த கொவிட் -19 தொற்றுக்குள்ளானவர் முல்லேரியா வைத்தியசாலையில் அனுமதிப்பு

கொவிட்-19 வைரஸை தடுப்பதற்காக ஜனாதிபதி செயலணியினர் மற்றும் கொவிட் – 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன் இலங்கை விமான நிலைய அதிகாரிகள் பெருமையையும், மனிதகுலத்திற்கான மிகுந்த அக்கறையையும் வெளிப்படுத்தும் முகமாக,கத்தாரில் இருந்து திருப்பியனுப்பப்பட்ட கொவிட் -19 நோய் தெற்றுக்குள்ளான இந்திய பயணியொருவரை உடனடியாக முல்லேரியா தொற்று நோய் வைத்தியசாலையில் அனுமதிக்க உதவினர்.

குறித்த நபர் 6E - 9091 இண்டிகோ விமானத்தில் புதன்கிழமை (17) ஆம் திகதி மும்பையில் இருந்து 1730 மணிக்கு கொழும்பு விமான நிலையத்தை வந்தடைந்து, அங்கிருந்து கிவ்ஆர் - 669 விமானம் மூலம் வியாழக்கிழமை (18) ஆம் திகதி 0315 மணிக்கு டோஹாவை சென்றடைந்தார்.

இருப்பினும், குறித்த நபர் கொவிட்-19 தொற்றுக்குள்ளானதை அறிந்த கத்தார் விமான நிலைய அதிகாரிகள் அவரை கிவ்ஆர் - 668 விமானத்தில் வெள்ளிக்கிழமை (19) 0135 மணிக்கு கொழும்புக்குத் திருப்பியனுப்பினர்.

இன்று (19) காலை கொழும்பு விமான நிலையத்திற்கு டோஹா விமானம் வந்தபின், இலங்கை அதிகாரிகள் உடனடியாக அவரது நிலைக்கு முன்னுரிமை அளித்து 0215 மணியளவில் அதாவது விமானம் வந்திரங்கி சுமார் 45 நிமிடத்திற்குள் விரைவாக அவரை தொற்று நோய் வைத்தியசாலையில் அனுமதித்தனர். spy offers | Nike Shoes