Header

Sri Lanka Army

Defender of the Nation

18th June 2020 22:50:18 Hours

படையினரால் யாழ் இராணுவ மகளிர் வீராங்கனைக்கு புதிய வீடு வழங்கி வைப்பு

படையினரின் நலன் கருதி பல நலன்புரிகளை மேற்கொள்ளும் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தினர், இலங்கை இராணுவ மகளிர் படையணியின் சாதாரண மகளிர் வீராங்கனையான தெற்கு கொடகபுரத்தில் வசிக்கும் தர்ஷிகா ஜேசுதாசன் அவர்களுக்கு ஒரு புதிய வீட்டை நிர்மாணித்து பரிசாக வழங்கிவைத்தனர். யாழ் குடாநாட்டின் பலாலியில் அவரது தந்தையும் ஓய்வு பெறுவதற்கு முன்பு கடற்படையில் பணியாற்றியவர் ஆவர்.

இந்த திட்டமானது யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வனிகசூரிய அவர்களின் முன்முயற்சிகளைத் தொடர்ந்து, கடந்த இரண்டு ஆண்டுகளில் யாழ் படையினரால் தங்களது தொழில்நுட்ப மற்றும் பொறியியல் நிபுணத்துவத்தையும், பயன்படுத்தி நூற்றுக்கணக்கான ஏழைக் குடும்பங்களுக்கு தேவையான வீடுகளை நிர்மாணித்து கொடுத்தனர். அதற்கமைய யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் வேண்டுகோளின் பேரில் பெரும்பாலும் தெற்கு மக்கள், வெளிநாட்டவர்கள், சிங்கள மற்றும் தமிழ் தொழிலதிபர்கள், நன்கொடையாளர்கள் மற்றும் நலம் விரும்பிகள் ஆகியோரின் நிதியுதவியுடன் யாழ் குடா நாட்டில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தெற்கில் இருந்து வந்த நன்கொடையாளரான திரு குமார வீரசூரிய அவர்கள் யாழ்பாணத்தில் உள்ள வரிய குடும்பங்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்காக இதுவரை பல முறை உதவிகளை வழங்கியுள்ளர். மேலும் பல ஆண்டுகளாக இராணுவத்தில் வேவையாற்றி வரும் குறித்த மகளிர் வீராங்கனைக்கான புதிய வீட்டினை நிர்மாணிப்பதற்கு அனைத்து மூலப்பொருட்களையும் வாங்குவதற்கு நிதியுதவியும் அளித்துள்ளார்.

52 பாதுகாப்பு படைப் பிரிவின் 521 ஆவது பிரிகேட் படைத் தலைமையகத்தின் 11ஆவது விஜயபாகு காலாட்படையின் படையினர் தண்ணீர், மின்சாரம் மற்றும் ஒரு சில உபகரணங்கள் வழங்கி இந்த வீட்டை நிர்மாணிப்பதில் முக்கிய பங்கு வகித்தனர். இந்து சமய சம்பிரதாய முறைப்படி இடம்பெற்ற நிழ்வின் பின்னர் வியாழக்கிழமை (18) புதிய வீடு மற்றும் குறித்த மகளிர் வீராங்கனைக்கான ஆசிர்வாத நிகழ்வுகள் இடம்பெற்றன .மேஜர் ஜெனரல் ருவான் வனிகசூரிய அவர்கள் பயனாளிக்கு ஒரு அன்பளிப்பினை வழங்கியதுடன் தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார். அவரது தந்தை, கடற்படை சிப்பாயான ஞானபிரசாகம் ஜேசுதாசென் இப்போது ஓய்வு பெற்று அவருடன் வசித்து வருகிறார், ஆனால் பொருளாதார நெருக்கடி காரணமாக சரியான வீடு இல்லாததால், அவரது அவலநிலை யாழ்ப்பாணத் தளபதியின் கவனத்திற்கு இலங்கை இராணுவ மகளிர் படையணியின் கட்டளை அதிகாரி மூலம் கொண்டுவரப்பட்டது.

இந்த விழாவில் வலிகாமம் பிரதேச செயலாளர், அரச அதிகாரிகள், 52 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் படைத் தளபதி , நன்கொடையாளர்களின் பிரதிநிதிகள், அதிகாரிகள், 11 ஆவது விஜயபாகு காலாட் படையணியின் படையினர், உறவினர்கள் மற்றும் கிராமவாசிகள் கலந்து கொண்டனர். Nike sneakers | Mens Flynit Trainers