Header

Sri Lanka Army

Defender of the Nation

16th June 2020 22:15:46 Hours

இராணுவ சேவைப் படையணியின் புதிய படைத் தளபதி பதவியேற்பு

இலங்கை இராணுவ சேவைப் படையணியின் 22 ஆவது புதிய படைத் தளபதியாக பிரிகேடியர் இந்திரஜித் பி கந்தானாரச்சி அவர்கள் இம் மாதம் (15) ஆம் திகதி சமய அனுஷ்டான ஆசிர்வாதங்களின் பின்பு படையணி தலைமையகத்தில் தனது பதவியை பொறுப்பேற்றார்.

புதிய படைத் தளபதி அவர்கள் தலைமையகத்திற்கு வரும்போது இவரை தலைமையக நுழைவாயிலில் வைத்து மத்திய கட்டளை தளபதியான கேர்ணல் ஈ.எம்.ஜி.ஏ அம்பன்பொல அவர்கள் வரவேற்று பின்னர் படையினரால் புதிய படைத் தளபதி அவர்களுக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைத்து வரவேற்கப்பட்டார்.

பின்னர் புதிய படைத் தளபதி அவரது பணிமனைக்கு சென்று உத்தியோகப பூர்வமாக கையொப்பமிட்டு தனது பதவியை பொறுப்பேற்றார் . பின்னர் ‘செத் பிரித்’ ஓதல் இடம்பெற்றது. இதன்போது சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் இணைந்திருந்தனர்.

பின்னர் தலைமையகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்துபசாரத்தில் இணைந்து கொண்டு படையினர் மத்தியில் உரையையும் நிகழ்த்தினார். affiliate tracking url | Nike Air Force 1 , Sneakers , Ietp STORE