14th June 2020 14:42:43 Hours
குக்குலேகங்கையில் அமைந்துள்ள இலங்கை இராணுவ சமாதான நடவடிக்கை பயிற்சி நிறுவனத்தின் 16 ஆவது ஆண்டு நிறைவானது பயிற்சி நிறுவனத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் ஆர்.ஏ.டி.எஸ் சாந்த ரணவீர அவர்களது தலைமையில் சமய அனுஷ்டான ஆசிர்வாதங்களுடன் இடம்பெற்றன.
இந்த ஆண்டு நிறைவை முன்னிட்டு இம் மாதம் (12) ஆம் திகதி இந்த பயிற்சி முகாம் வளாகத்தினுள் கட்டளை தளபதி அவர்களினால் மரநடுகைகள் மேற்கொள்ளப்பட்டு தளபதி படையினர் மத்தியில் உரையையும் நிகழ்த்தினார்.
அன்றைய தினம் மாலை பௌத்த மததேரரின் தலைமையில் சமய அனுஷ்டான ஆசிர்வாத பிறார்த்தனைகள் இடம்பெற்று பௌத்த கதாபிரசங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அடுத்த நாள் (13) ஆம் திகதி 60 படையினரது பங்களிப்புடன் கொஷ்குலான மற்றும் கெலின்கந்த விகாரைகளில் சிரமதான பணிகள் படையினரால் மேற்கொள்ளப்பட்டன.
இந்த ஆண்டு நிறைவு விழாவானது பயிற்சி நிறுவனத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் சாந்த ரத்னவீர அவர்களது வழிக்காட்டலின் கீழ் பிரதான பயிற்றுவிப்பாளர் லெப்டினன்ட் கேர்ணல் ஆனந்த சமரநாயக அவர்களது தலைமையில் ஆனைச்சீட்டு உத்தியோகத்தர் மற்றும் படையினரது பங்களிப்புடன் மேற்கொள்ளப்பட்டன. best Running shoes brand | Jordan Release Dates , Iicf