14th June 2020 22:14:02 Hours
இலங்கை தேசிய பாதுகாப்பு படையணியின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் ரசிக பெர்ணாண்டோ அவர்கள் இராணுவ தலைமையகத்தின் பிரதி பதவிநிலை பிரதானியாக பதவியேற்றதன் பின்பு இம் மாதம் (13) ஆம் திகதி தலைமையகத்திற்கு விஜயத்தை மேற்கொண்டார்.
தலைமையகத்திற்கு வருகை தந்த படைத் தளபதியை தலைமையகத்தின் பிரதி கட்டளைத் தளபதியான பிரிகேடியர் கே.எம். திலகரத்ன அவர்கள் வரவேற்றார். பின்னர் படைத் தளபதியும், பிரதி பதவிநிலை பிரதானிக்கு படையினரால் இராணுவ சம்பிரதாய முறைப்படி அணிவகுப்பு மரியாதைகள் வழங்கி வைக்கப்பட்டு வரவேற்கப்பட்டார்.
தலைமையகத்திற்கு வருகை தந்த படைத் தளபதி அவர்கள் தலைமையக வளாகத்தினுள் மரநடுகைகளை மேற்கொண்டார். பின்னர் படைத் தளபதி அவர்கள் தலைமையகத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட தேநீர் விருந்துபசாரத்தில் இணைந்து கொண்டு படையினர் மத்தியில் உரையையும் நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். Sportswear free shipping | Air Jordan XXX1 31 Colors, Release Dates, Photos , Gov