14th June 2020 19:50:06 Hours
பண்டாரவளை டொவ மஹாவங்குவ பிரதேசத்தில் ஏற்பட்ட திடீர் காட்டுத் தீயானது மத்திய பாதுகாப்பு படையினர்,112 ஆவது பிரகேட் மற்றும் தியத்தலவையிலுள்ள விமானப் படையினர் பண்டாரவளை நகர சபை தீயணைக்கும் படையினருடன் இணைந்து நிலைமையினை சனிக்கிழமை 13 ஆம் திகதி கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.
குறித்த தீயணைப்பு பணிகளில் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி மற்றும் 20 ஏனைய படையினர்,112 ஆவது பிரிகேட் படைத் தலைமையகத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி மற்றும் 10 ஏனைய படையினர் , விமானப் படையைச் சேர்ந்த ஒரு அதிகாரி மற்றும் 24 ஏனைய படையினர் ஈடுபட்டு தீ பரவலினை கட்டுப்பாட்டினுல் கொண்டுவந்தனர்.
மத்திய பாதுகாப்பு படைத் தளபதியவர்களின் வழிகாட்டல் மற்றும் 112 ஆவது பிரிகேட் படைத் தலைமையகத்தின் மேற்பார்வையில் பாதுகாப்பு படையினர் தங்களது பங்களிப்பினை மேற்கொண்டனர் . Nike shoes | UOMO, SCARPE