13th June 2020 07:04:10 Hours
56 ஆவது பாதுகாப்பு படைப் பிரிவின் புதிய படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஏ.என் அமரசேகர அவர்கள் 561,562 ,563 ஆவது படைத் தலைமையகங்கள் மற்றும் அதன் கீழ் இயங்கும் பட்டாலியன்களுக்கு தனது உத்தியோகபூர்வமான விஜயத்தை ஜீன் 01,02 மற்றும் 04 ஆம் திகதிகளில் மேற்கொண்டார்.
பிரிகேட் படைத் தளபதிகள் மற்றும் கட்டளை அதிகாரிகள் விஜயத்தை மேற்கொண்ட படைப் பிரிவின் தளபதியை விவேற்றனர். அதன் பின்னர் அவருக்கு இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ மரியாதைகள் அளிக்கப்பட்டது.
பிரிகேட் படைத் தலைமையகங்கள் மற்றும் பட்டாலியன்களுக்கான தனது விஜயத்தின் ஞாபகர்த்தமாக முகாம் வளாகத்தினுல் மரக்கன்றுகளையும் நாட்டினார்.மேலும் பிரிகேட் படைத் தளபதிகள் மற்றும் கட்டளை அதிகாரிகளினால் அவருக்கு படைத் தலைமையகங்களின் நிருவாக மற்றும் செயற்பாட்டு விடயங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டன.
தனது விஜயத்தின் போது படைப் பிரிவின் தளபதியவர்கள் கொவிட்-19 தொற்றுநோயிற்கு எதிரான் சுகாதார பாதுகாப்பு தொடர்பாக அனைத்து அதிகாரிகள் மற்றும் ஏனைய படையினரிடம் உரையாற்றினார். trace affiliate link | yeezy sole turning blue color shoes FX6794 FX6795 Release Date - nmd legion ink goat costume ideas for boys