15th June 2020 22:00:17 Hours
கொவிட்-19 அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள ஈடு இணையற்ற அர்ப்பணிப்பு மற்றும் இராணுவத்தினரின் சேவைகளை பாராட்டிய ஹிர்தரமணி குழும நிறுவனங்கள், இன்று (12) ஆம் திகதி 20000 முகக்கவசங்களை இராணுவத் தலைமையகத்தில் வைத்து பாதுகாப்புத் தலைமை அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வாவிடம் அன்பளிப்பு செய்தனர்.
அந்த உருமறைப்பு வண்ண முகக்கவசங்களின் நன்கொடையானது ஹிர்தரமணி குழுமத்தின் மாகா தனியார் அபிவிருத்தி நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் திரு நவீன் பெரேரா அவர்களால் நடவடிக்கை பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்களின் ஊடாக ஒருங்கிணைக்கப்பட்டது.
திரு நவீன் பெரேரா தலைமையிலான ஒரு நிறுவனத்தின் தூதுக்குழு லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை சந்தித்து , கொவிட்-19 கட்டுப்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளும் இராணுவத்தினரிடையே விநியோகிப்பதற்காக அந்த உருமறைப்பு வண்ண முகக்கவசங்களை அன்பளிப்பு செய்தது.
லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா நிறுவனத்தின் தூதுக்குழுவிற்கு நன்றி தெரிவித்ததோடு அவர்களின் அக்கறையைப் பற்றி அதிகம் பேசி பாராட்டியதுடன் தனது நன்றியைத் அவர்களுக்கு தெரிவித்தார். மற்ற நாடுகள் கடுமையாக போராடும் போது ,தளபதியின் திறமையான வழிகாட்டுதல் தலைமைத்துவம் மற்றும் தரைப்படையினரால் நிகழ்த்தப்பட்ட மிகச்சிறந்த பணிகள் மூலம் இந்த கொடிய தொற்றுநோயிலிருந்து நாட்டை தடுத்ததாக நிறுவனத்தின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.
நடவடிக்கை பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க, திரு நவீன் பெரேரா, ஹிர்தராமணி குழுமத்தின் பணிப்பாளர் திரு சித்தார்த் , ஹிர்தரமணி நிட் கிளஸ்டர் திட்டமிடல் மற்றும் செயல்பாடுகள் பணிப்பாளர் ,திரு நிரஞ்சன் பஸ்நாயக்க , ஹிர்தரமணி நிட் கிளஸ்டர் தலைமை மனிதவள அலுவலர் செல்வி சமீந்திர பெரேரா தஸ்நாயக்க, ஹிர்தரமணி நிட் கிளஸ்டர் தலைமை சந்தைப்படுத்தல் உத்தியோகத்தர் தருமல் விஜேசிங்க ஆகியோர் தளபதியின் அலுவலகத்தில் நடந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர். affiliate link trace | Men Nike Footwear