Header

Sri Lanka Army

Defender of the Nation

15th June 2020 22:35:52 Hours

புதிதாக பதவியுயர்தப்பட்ட மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத்யாப்பா அவர்களுக்கு தளபதி பாராட்டு தெரிவிப்பு

பாதுகாப்பு தலைமை அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் கஜபா படையணியின் படைத் தளபதி மற்றும் விஷேட படையணி ஆகிய படையணிகளின் படைத் தளபதியாக, புதிதாக பதவியுயர்தப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சுஜீவ செனரத்யாப்பா அவர்கள் சனிக்கிழமை 13 ஆம் திகதி இராணுவத் தலைமையகத்தில் லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுடனான சந்திப்பின் போது அவர் மீது பின் செய்யப்பட்ட சின்னத்தை பதித்தார்.

பாதுகாப்பு தலைமை அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களின் சிபார்சிக்கமைய, முப்படைகளின் தளபதியும் அதிமேதகு ஜனாதிபதியுமான கோத்தாபய ராஜபக்ஷ அவர்களினால், 57 ஆவது பாதுகாப்பு படைப்பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் டி.ஜி.எஸ் செனரத்யாப்பா மற்றும் பிரிகேடியர் சஞ்ஜய வனசிங்க ஆகியோர் 2020 ஜூன் 2 ஆம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் மேஜர் ஜெனரல் தரத்திற்கு பதவியுயர்த்தப்பட்டுள்ளனர்.

முன்னர் கஜாபா படையணியை சேர்ந்த மேஜர் ஜெனரல் சுஜீவ செரத்யாப்பா, பின்னர் சிறப்புப் படையணிக்கு முன்னோடி வீரர்களில் ஒருவராக மாற்றப்பட்டார். மறைந்த லெப்டினன் ஜெனரல் டென்சில் கோபேகடுவ மற்றும் கஜாபா படையணியின் ஸ்தாபகர் மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன போன்ற புகழ்பெற்ற வீரர்களுடன் 1992 ஆம் ஆண்டில் ஆணையிரவில் நாட்டிற்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த மறைந்த கேணல் ஒய்.என். பலிபன அவரினால் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போதைய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவும் அந்த நேரத்தில் கஜபா படையணியின் கட்டளை அதிகாரியாக இருந்தார்.

தனது தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழக பட்டப்படிப்பு முடிந்ததும், மேஜர் ஜெனரல் செனரத்யாப்பா அவர்கள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் பிரிகேடியர் பொது பதவி நிலை அதிகாரியாக நியமிக்கப்பட்டார், பின்னர் 57 ஆவது பாதுகாப்பு படைப்பிரிவின் படைத் தளபதியாக நியமிக்கப்பட்டார்.

அவரது பதவி உயர்வுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தபின், லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் அவர் மீது சின்னத்தை பதித்து, மற்ற வளரும் அதிகாரிகள் அவரது முன்முயற்சிகளையும், பாதைகளையும் பின்பற்றுவதற்காக உயர் திறமை வாய்ந்த ஒரு முன்மாதிரியான அதிகாரியாக இருப்பதன் முக்கியத்துவத்தை நினைவுபடுத்தினார். நிறுவனத்தில் இரு நட்சத்திர ஜெனரலின் பதவிக்கு உயர்த்தப்படுவதோடு தொடர்புடைய முக்கியத்துவத்தையும், அத்தகைய பதவி உயர்வு எவ்வாறு கட்டளை மற்றும் நிர்வாகத்தில் சிறப்பாக இருக்கும் என்பதையும் அவர் அவரிடம் கூறினார். "உயர்ந்த தார்மீக அடிப்படையிலான உங்கள் அர்ப்பணிப்பின் மூலம் தொடர்ந்தும் ஜி.ஆர், எஸ்.எஃப் மற்றும் இராணுவக் கொடிகள் உயர்ந்த நிலையில் காணப்படும்" என்று தளபதி சாதனை பாராட்டியுள்ளார். best Running shoes | Air Jordan 1 Retro High OG "UNC Patent" Obsidian/Blue Chill-White For Sale – Fitforhealth