Header

Sri Lanka Army

Defender of the Nation

13th June 2020 08:04:10 Hours

எஸ்எல்ஈஎம்ஈ படையணியின் 70 ஆண்டுகால வரலாறு

1949 ஆம் ஆண்டில் அப்போதைய இலங்கை இராணுவம் நிறுவப்பட்டதற்கு சமகாலத்தில் உள்ள இராணுவத்தின் இலங்கை மின் மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் 70 ஆண்டுகால ஆவணப்படுத்தப்பட்ட மைல்கல் வரலாற்றைக் (1949-2019) கொண்ட மதிப்புமிக்க குறிப்பு புத்தகமானது,பாதுகாப்பு தலைமை அதிகாரியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களிடம் இன்று (10) இராணுவ தலைமையகத்தில் வைத்து வழங்கப்பட்டது.

இலங்கை மின் மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் 9 ஆவது படைத் தளபதியும் உபகரண மாஸ்டர் ஜெனரலுமான எம்.ஏ.ஏ துமிந்த சிறிநாக அவர்கள் இராணுவத் தளபதியை அவரது அலுவலகத்தில் வைத்து சந்தித்து முன்னாள் ரோயல் பிரிட்டிஷ் இராணுவ மின் மற்றும் இயந்திர பொறியியலாளர்களின் காலங்களையும், அதன் படிப்படியான பரிணாம வளர்ச்சியையும் அடிப்படையாக்க் கொண்டு இலங்கை இராணுவத்தின் முழு அளவிலான பிரிவினையும் கொண்ட ‘’ஹெத்த வசரக்க பிய சட்டஹன்’’( 70 ஆண்டுகால தொகுப்பு) எனும் புத்தகத்தின் பிரதியினை வழங்கினார்.

லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்கள் இலங்கை மின் மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் முயற்சிகளை வாழ்த்தியதுடன், வளர்ந்து வரும் அதிகாரிகளுக்கான குறிப்பு ஆவணமாக அதன் பயனை அமைப்புக்கு எடுத்துக்காட்டி, 1949 ஆம் ஆண்டில் அப்போதைய இலங்கை இராணுவத்தின் வரலாற்றுடன் அதன் வரலாறு ஒத்திருக்கின்ற முதற்கொண்டே இலங்கை மின் மற்றும் இயந்திர பொறியியல் படையணியின் முன்முயற்சிக்கு நன்றி தெரிவித்தார். latest Running | UK Trainer News & Releases