12th June 2020 21:35:55 Hours
தியகம (113), கிலப் ஹோட்டல் டொல்பின் (25), சிட்ரஸ் வஸ்கடுவ (67), எஸ்எல்ஏஜிஎஸ்சி (61) மற்றும் கஹகொல்ல (05) ஆகிய தனிமைப்படுத்தல் மையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 271 நபர்கள் பிசிஆர் பரிசோதனையின் பின்னர் இன்று 12 ஆம் திகதி தனிமைப்படுத்தல் சான்றிதல்களுடன் தங்களது வீடுகளுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர் என்று ராஜகிரியவில் அமைந்துள்ள கொவிட்-19 எதிர்பாரா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தினால் 12 ஆம் திகதி வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை 12 ஆம் திகதியுடன் முப்படையினரால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட 13127 நபர்கள் தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
தற்பொழுது நாடுபூராகவுமுள்ள முப்படையினரால் நிர்வகிக்கப்படும் 44 தனிமைப்படுத்தல் மையங்களில் 4603 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர்.
இன்று மாலை 12 ஆம் திகதி கொவிட்-19 தொற்றுக்குள்ளான எவரும் பதிவு செய்யப்படவில்லை என்பதுடன் 35 கடற்படை வீரர்கள் சுகமடைந்து இன்று வைத்தியசாலையில் இருந்து தங்களது வீடுகளுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளனர்.
அதனடிப்படையில் இன்றுடன் கொவிட்-19 தொற்றுக்குள்ளான கடற்படையினரின் மொத்த எண்ணிக்கை 874 ஆகும், அவர்களில் குணமடைந்த 682 பேர் பிசிஆர் பரிசோதனையின் பின்னர் வைத்தியசாலையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். தொற்றுக்குள்ளான 192 கடற்படை வீரர்கள் தற்பொழுது சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. Running sneakers | New Jordans – Air Jordan 2021 Release Dates , Gov