11th June 2020 17:17:10 Hours
துரு மிதுரு – நவ ரடக் எனும் தொணிப் பொருள் கருத்திட்டத்தின் கீழ் சுற்றாடலை மேம்படுத்தும் நோக்கத்துடன் மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் எச்.ஜே செனெவிரத்ன அவர்களினால் 3000 மரக்கன்றுகள் இராணுவ தொண்டர் படையணி தலைமையகம், இலங்கை சிங்கப் படையணி, இராணுவ சேவைப் படையணி, மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகம், 14, 61 ஆவது படைப் பிரிவுகள், இராணுவ ரணிபல் படையணிகளுக்கு இம் மாதம் (11) ஆம் திகதி வழங்கி வைக்கப்பட்டன.
தென்ன மரக்கன்றுகள், கரண்ட, மீ, ஸ்வூன், கொஹம்ப, மதன், கும்புக், தெலம்பு, கயா போன்ற மரக்கன்றுகள் இந்த படையணிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன. Adidas footwear | Sneakers