08th June 2020 15:13:56 Hours
நந்திகடாலில் அமைந்துள்ள முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 11 ஆண்டு நிறைவை முன்னிட்டு சமய அனுஷ்டான நிகழ்வுகள் முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி அவர்களது தலைமையில் இடம்பெற்றன. இந்த நிகழ்வானது இம் மாதம் (5) ஆம் திகதி பொசன் பௌர்ணமி தினத்தன்று நாட்டிற்காக உயிர்களை தியாகம் செய்த படை வீரர்களை நினைவு படுத்தி பிரித் ஓதி சமய அனுஷ்டான நிகழ்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
முல்லைத்தீவு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் தீப்தி ஜயதிலக அவர்களின் அழைப்பையேற்று 17 பேரை உள்ளடக்கிய தேரர்கள் வருகை தந்து இந்த சமய அனுஷ்டான ஆசிர்வாதங்களை மேற்கொண்டு பிறார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அத்துடன் அன்றைய தினம் இரவு முழுவதும் பிரித் ஓதப்பட்டு மறு தினம் தலைமையத்தில் படையினர்களுக்கு தானம் வழங்கும் நிகழ்வுகள் இடம்பெற்றன. Nike Sneakers Store | Women's Nike Superrep