06th June 2020 11:10:56 Hours
பொசன் முழுமதி தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணம் புனித ஸ்ரீ நனைனாத் தீவு விகாரையின் வரலாற்று சிறப்புமிக்க வெள்ளரசு மரத்தை சுற்றி தங்க முலாம் பூசப்பட்ட வேலி 05ம் திகதி வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வனிகசூரிய இராணுவ மற்றும் கடற்படையின் உயர் அதிகாரிகளுடன் இணைந்து திரை நீக்கம் செய்தார். இந்த சுற்று வேலியை நிர்மாணிப்பு ஹட்டன் நேஷனல் வங்கியின் சட்ட பணிப்பாளர் செல்வி துஷாரி மற்றும் மேலும் பலரின் நிதியுதவியுடன் 511 வது படைத் தளபதி கர்னல் ரோஹித ரத்நாயக்க அவர்களால் மேற்கொள்ளப்பட்டது.
விழாவில் ஸ்ரீ நனைனைத் தீவு விகாரையின் தலைமை தேரர் நவடகல பதுமகீர்த்தி திஸ்ஸ தேரர் மற்றும் பல தேரர்கள் மத ஆராதணைகள் மற்றும் ஆசீர்வாதங்களை வழங்கினர். திறப்பு விழாவில் 51வது படைப்பிரிவு தளபதி , 511 வது படைத் தளபதி, சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் படையினர் பங்கேற்றனர். Buy Sneakers | 【11月発売予定】シュプリーム × ナイキ エアフォース1 全3色 - スニーカーウォーズ