Header

Sri Lanka Army

Defender of the Nation

06th June 2020 12:54:06 Hours

இராணுவ தலைமையக வளாகத்தில் பொசன் தினத்தை முன்னிட்டு பொசன் வலயம் ஒளிரூட்டப்பட்ட வெசாக் கூடுகள்

வெசாக் பண்டிகைக்கு அடுத்தப்படியாக பௌத்தர்களின் மிக முக்கியமான நிகழ்வான பொசன் போயா தினத்தை முன்னிட்டு படையினரால் அதன் தனித்துவ முக்கியத்துவத்திற்கு மதிப்பளித்து அளித்து 24 மகத்தான பல வர்ணங்களிலான வெசாக் கூடுகளை நிர்மாணித்து இராணுவ தலைமையக பாதையின் இருபுறம் பத்தரமுல்லை மத்திய சுற்றாடல் அதிகாசபை வரையான பகுதியை பொச்ன வலயமாக பிரகடனப்படுத்தி வண்ணமயமாக அலங்கரித்து இன்று மாலை (03) ஒளியூட்டி ஆரம்பிக்கப்பட்டது.

இந்த நிகழ்வானது பழைய சமய கலாசார பண்பாடுகளின் பெரும் நன்மைகளை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் நோக்கில் பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்கள் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு பல வர்ண வெசாக் கூடுகளின் காட்சிப்படுத்தலை ஆரம்பித்துவைத்தார். போர் உபகரண வழங்கல் நாயகம் ஜெனரல் மேஜர் ஜெனரல் பிரசன்ன சந்திரசேகர அவர்களின் அழைப்பின் பேரில் தலைமையக படையணியின் ஏற்பாட்டில் விசேட பௌத்த பூஜையில் கலந்துக் கொண்டார்.

இராணுவத் தளபதி காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள படைப்புக்களை ஒவ்வான்றாக பார்வையிட்டதுடன் அதனை நிர்மானித்த படையினருடன் ஒரு சில வார்த்தைகளையும் பகிர்ந்துக் கொண்டார் இந்த 2020ம் வருடத்திற்கான பொசன் வலயம் மக்களின் பார்வைக்காக சில நாட்கள் திறந்திருக்கும். எமது நாட்டிற்கு புத்த மதத்தை அறிமுகப்படுத்திய மகிந்த தேரரின் மிகிந்தலை வருகையின் வரலாற்று நிகழ்வை கொண்டாடும் பொசன் ஏற்பாடுகளை பார்வையிட பொது மக்களுக்கு அன்புடன் அழைப்பு விடுக்கப்படுகின்றது.

வழமையாக இராணுவ தளபதியின் உத்தரவின் பேரில் நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான இராணுவத் படையினரின் பங்களிப்பில் பொசன் நிகழ்வு பல அலங்காரங்கள் கூடுகள் தர்ம பிரசங்கங்கள், அன்னதானம், இரத்ததானம் அத்தியாவசிய பொருட்கள் பகிர்ந்தளிப்பு மற்றும் உலர் உணவு பொருட்கள் நன்கொடை வழங்கல் ஆகியன உள்ளடக்கியதாக காணப்படும். ஆனால் இம்முறை கொவிட் - 19 வைரஸ் தாக்கத்தின் காரணமாக அவை அனைத்தும் அகற்றப்பட்டுள்ன.

பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்தியாவில் இருந்து மகிந்த தேரரின் வருகையில் அனுராதபுர மிகிந்தலையில் இலங்கையில் புத்த சாசனம் நிறுவப்பட்டு பௌத்த நெறிமுறை வாழ்க்கை மற்றும் ஆன்மீக முன்னேற்றத்திற்கான வழி அறிமுகப்படுத்தப்பட்டது. . jordan release date | adidas Yeezy Boost 350