03rd June 2020 16:00:41 Hours
கொவிட் 19 வைரஸ் பரவலினை அடுத்து அவசர தேவைக் கருதி பாதுகாப்பு தலைமை பிரதானியும் இராணுவத் தளபதியும் சிறப்பு அதிரடி படைத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் சிந்தனைக்கு அமைவாக மாத்தளை நாவுலயில் அமைந்துள்ள சிறப்பு அதிரடி படையணி தலைமையகத்தின் படையினர் சில நாட்களுக்கு முன்னர் மாத்தளை மாவட்ட வைத்தியசாலையின் இரத்த வங்கியின் களஞ்சியத்தை மீள் நிரப்பும் நோக்கில் இரத்த தானம் செய்தனர்.
இவ் இரத்த தானத்தினை சிறப்பு அதிரடி படையணி தலைமையக நிலையத் தளபதி , 122 அதிகாரிகள் மற்றும் முதலாவது சிறப்பு அதிரடி படையின் படையினர் மாத்தளை மாவட்ட வைத்தியசாலையின் இரத்த வங்கிக்கு வழங்கியிருந்தனர்
சிறப்பு அதிரடி படையணி தலைமையக படையினர் இந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதி வாரத்தில் கொவிட் 19 வைரஸ் பரவல் தொடங்கிய உடனேயே இரத்த தானம் செய்திருந்தனர். Buy Sneakers | Nike React Element 87