03rd June 2020 18:00:41 Hours
இராணுவ அதிரடிப் படை சேவை வனிதையர் சங்கத்தின் ஒத்துழைப்புடன் மாத்தளை இராணுவ அதிரடிப் படை தலைமையகத்தின் படையினர் எல்கடுவை தோட்டத்தின் 29 வது பிரிவின் 23 ஏழைக் குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள், உலர் உணவு பொருட்கள் மற்றும் மரக்கறிகளை நன்கொடையாக வழங்கும் செயற்றிட்டம் அன்மையில் முன்னெடுக்கப்பட்டது.
இராணுவ அதிரடிப் படை மற்றும் இராணுவ சேவை வனிதையர் சங்க தலைவி திருமதி சுஜீவா நெல்சன் அவர்களின் முன்மொழிதலுக்கு அமைவாக இராணுவ சேவை வனிதையர் சங்கம் இச் சமூகத் திட்டத்திற்கு குறுகிய அறிவித்தலுக்கு அமைவாக இராணுவ அதிரடிப் படைத் தலைமையகத்திற்கு தேவையான வளங்களை பெற்றுக் கொடுத்தது.
நன்கொடையில் குடும்பத்திற்கு ஒரு வாரத்திற்கு போதுமானதான பொருட்கள் வழங்கப்பட்டன. இந்த சமூக நலத்திட்டத்தில் இராணுவ அதிரடிப் படையின் நிலையத் தளபதி, அதிகாரிகள் மற்றும் கலந்து கொண்டனர்.best Running shoes | [169220C] Stone Island Shadow Project (The North Face Black Box) – Hamilton Brown, Egret