Header

Sri Lanka Army

Defender of the Nation

01st June 2020 13:25:00 Hours

கிளிநொச்சி அதிகாரிகளுக்கு பதவி உயர்விற்கான செயலமர்வு

கேப்டன் பதவி உயர்வு பரீட்சைக்கு தோற்றும் அதிகாரிகளுக்கான 10 நாள் மீள் நினைவூட்டல் பாடநெறி கிளிநொச்சி பாதுகாப்புப் படை தளபதி மேஜர் ஜெனரல் ஜயந்த குணரத்னாவின் அறிவுறுத்தலின் பேரில் திங்கட்கிழமை (1) நெலும் பியாச கேட்போர் கூடத்தில் தொடங்கியது.

நிகழ்வில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி படைத் தளபதி சார்பாக 65 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் டிஎம்எச்டி பண்டார கலந்து கொண்டு தொடக்க உரையை நிகழ்த்தினார். கிளிநொச்சி பாதுகாப்புப் படைத் தலைமையக கட்டளையின் கீழ் பணியாற்றும் 38 அதிகாரிகள் இந்த பாடநெறியை தொடர்கின்றனர். Running sports | Nike Air Max