Header

Sri Lanka Army

Defender of the Nation

31st May 2020 17:59:54 Hours

யாழ் படையினரால் சங்கானையில் தேவையுடைய குடும்பத்திற்கு வீடு வழங்கல்

யாழ் பாதுகாப்புப் படை தலைமையகத்தின் வறுமையில் வாடும் வீடற்ற குடும்பங்களுக்கு வீடு கட்டும் திட்டத்தின் கீழ் நிர்மானித்த புதிய வீட்டை தனது குழந்தைகளுடன் வறுமையில் வாழும் யாழ்ப்பாணம் சங்கானையை சேர்ந்த திருமதி ஜெகதீஷ்வரி ஆம்பிகாவதி என்பவர் பெற்றுக் கொண்டார் .

யாழ் பாதுகாப்புப் படை தளபதி மேஜர் ஜெனரல் ருவான் வனிகசூரிய அரச மற்றும் தனியார் துறை நன்கொடையாளர்களின் நிதியுதவியைப் பெற்று கட்டுமானத்திற்காக 11வது இலங்கை லேசாயுத காலாட்படை மற்றும் 5 வது பொறியியலாளர் சேவைகள் படையணி படையினரைக் கொண்டு இப் புதிய வீட்டை நுறுமானித்தார்.

யாழ் மாவட்ட செயலாளர் திரு கனபதிபிள்ளை மகேசன் மற்றும் இத்திட்டத்தின் காரணகர்த்தாவும் யாழ் பாதுகாப்புப் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ருவன் வனிகசூரியா இணைந்து இப் புதுய வீட்டை இந்து சம்பிரதாயங்களுக்கு அமைவாக விளக்கேற்றி திங்கட்கிழமை (1) காலை வீட்டின் சாவியை பயனாளிக்கு வழங்கி வைத்தனர். தங்குமிடம் (இங்கு புகைப்படங்களைக் காண்க)

விழாவில் 51 வது படைப்பிரிவு தளபதி, பிரதி மாவட்ட செயலாளர், உதவி மாவட்ட செயலாளர் (காணி), சங்கானை பிரதேச செயலாளர், உயர் அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் பங்கு பற்றிருந்தனர். இதன் போது பயனாளியிடம் நிலத்தின் உறுதிப் பத்திரம் வழங்கப்பட்டது. short url link | adidas