Header

Sri Lanka Army

Defender of the Nation

02nd June 2020 16:04:18 Hours

கிழக்கு படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் செனரத் பண்டார கடமை ஏற்றல்

வெலிகந்தை கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு 19வது படைத் தளபதியாக மேஜர் ஜெனரல் செனரத் பண்டார 01 ஆம் திகதி இராணுவ சம்பிரதாய முறைப்படி மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் கடமையேற்றார்.

இவருக்கு 04 வது கொமுனு ஹேவா படையின் பாதுகாப்பு வரவேற்பு மரியாதை வழங்கப்பட்டதை தொடர்ந்து கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் பிரிகேடியர் பொது பணி பிரிகேடியர் மனோஜ் லமாஹேவா அவர்களால் வரவேற்கப்பட்டார்.

பாதுகாப்புப் படையின் புதிய தளபதி மகாசங்கத்தினரின் 'செத் பிரித்' ஓதல்களுடன் உத்தியோக பூர்வ ஆவணத்தில் கையொப்பமிட்டு பதவி ஏற்றுக் கொண்டார், பின்னர் தளபதி தலைமையக வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நட்டினார்.

படையினருக்கு உரையாற்றும் போது இந்த பெருமை மிக்க அமைப்பின் வீரர்களாக தொடர்ச்சியான பயிற்சியின் மூலம் திறன்களை மேம்படுத்திக் கொண்டு கடமைகளையும் பொறுப்புக்களையும் அர்ப்பணிப்புடன் திறம்பட செய்தல் வேண்டும். உயர்தரமான ஒழுக்கத்தினைப் பேணுவதன் மூலம் இராணுவத்தை பாதுகாத்தலின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். கடமைகளை நிறைவேற்றும் போது வைரஸ் தாக்கத்திற்கு எதிரான அனைத்து சுகாதார அறிவுறுத்தல்களையும் பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டார். கிழக்கின் பாதுகாப்பு படை தலைமையகம் கடமைகளை வினைத்திறனாகவும் விளைத்திறனாகவும் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.

கிழக்கு பாதுகாப்புப் படை தளபதியாக நியமிக்கப்படுவதற்கு முன்னர் மேஜர் ஜெனரல் சேனரத் பண்டார மத்திய பாதுகாப்புப் படை தலைமையகத்தின் பல்லேகலை 11 வது படைப்பிரிவின் தளபதியாக பணியாற்றினார். Buy Sneakers | Best Selling Air Jordan 1 Mid Light Smoke Grey For Sale 554724-092